For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சில நேரம் "கிறுக்குத்தனம்" மூலமாகவும் பிரபலமாகலாம் பாஸ்!

Google Oneindia Tamil News

ஸ்டாக்ஹோம்: சாதனைகள் மூலம் தான் பிரபலமாக வேண்டும் என்றில்லை, சமயங்களில் கிறுக்குத்தனம் மூலமும் பிரபலம் ஆகலாம். அதிலும், தற்போதைய இணைய உலகில் யூடியூப் உதவியோடு இது எளிதில் சாத்தியம்.

அப்படி தனது வித்தியாசமான ரோபோக்களின் உதவியோடு பிரபலம் ஆனவர் தான் இந்த 'ரோபோ ராணி' சிம்மொன் கியர்ட்ஸ் (25).

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வசித்து வரும் இவரது யூடியூப் சேனலை சுமார் 1 லட்சத்து 24 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

வில்லேஜ் விஞ்ஞானி...

வில்லேஜ் விஞ்ஞானி...

இத்தனை பேர் விரும்பிப் பார்க்கும் அளவிற்கு, சிம்மொன் அப்படியென்ன வீடியோ வெளியிடுகிறார் என ஆச்சர்யமாக இருக்கிறதா. சிம்மொன் வெளியிடும் வீடியோ எல்லாமே வில்லேஜ் விஞ்ஞானிகள் ஸ்டைல் தான்.

இது தான் ஹைலைட்...

இது தான் ஹைலைட்...

அதாவது ரூம் போட்டு யோசித்து அன்றாட வேலைகளுக்கென புதிது புதிதாக பல ரோபோட்களை உருவாக்குவது தான் இவரது வேலை. ஆனால் அவற்றில் ஒன்று கூட இவர் விருப்பப்படி வேலை செய்யாது என்பது ஹைலைட்.

இதுக்கும் ஒரு மிஷின்...

இதுக்கும் ஒரு மிஷின்...

சாம்பிளுக்குச் சொல்வதென்றால், பல் விளக்குவதற்கென்று இவர் ஒரு ரோபோட் கண்டுபிடித்துள்ளார். தலையில் தொப்பி போல் இதனை மாட்டிக் கொள்ள வேண்டும். அதன் இடுக்கி போன்ற பாகத்தில் டூத் பிரசை மாட்டி விட வேண்டும்.

விளக்கும்... ஆனா விளக்காது

விளக்கும்... ஆனா விளக்காது

பின், அந்த மெஷினை ஆன் செய்தால், நானும் பல் விளக்குகிறேன் பார் என்ற ரேஞ்சுக்கு பல்லுக்கும் வலிக்காமல், பிரஷும் நோகாமல் அந்த மிஷின் இப்படியும், அப்படியும் ஆடிக் கொண்டே இருக்கிறது. இதனை வீடியோவாக எடுத்து தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் சிம்மொன்.

மேக்கப் போட...

மேக்கப் போட...

இதேபோல், லிப்ஸ்டிக் போட்டுவிட ஒரு மெஷின் கண்டுபிடித்துள்ளார். ஆனால் இந்தப் பக்கி, உதட்டுக்கு மட்டும் லிப்ஸ்டிக் போடுவதில்லை. மாறாக கன்னத்திற்கும் சேர்த்து லிப்ஸ்டிக்கை கிறுக்கி வைக்கிறது.

கைதட்டக்கூட மிஷின்...

கைதட்டக்கூட மிஷின்...

இது தவிர காய்கறி நறுக்க, சாப்பாடு பரிமாற, கம்யூட்டரோடு சண்டை போட என ஏகப்பட்ட மிஷின்களை உருவாக்கியுள்ளார் சிம்மொன். கை தட்டக் கூட ஒரு மிஷின் உருவாக்கியுள்ளார் என்றார் பாருங்களேன்.

யூடியூப் சேனல்...

யூடியூப் சேனல்...

இவ்வாறு தனது கண்டுபிடிப்புகளையும், அவை செயல்படும் விதத்தையும் தான் வீடியோவாக எடுத்து, தனது யூடியூப் சேனலில் வெளியிட்டு வருகிறார் சிம்மொன். இவரது வீடியோக்கள் இப்படியொரு மிஷினா என்ற ஆச்சர்யத்தையும், சிரிப்பையும் ஒருங்கே வரவழைப்பது தான் சிறப்பம்சமே.

வெயிட் அண்ட் ஸீ...

வெயிட் அண்ட் ஸீ...

முழு நேர வேலையாகவே இதைச் செய்து வரும் சிம்மொன்னிடம், இன்னும் இதே மாதிரி நிறைய ஐடியாக்கள் கைவசம் உள்ளதாம். அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கண்டுபிடித்து, வீடியோவாகப் பதிவு செய்து வெளியிடும் எண்ணம் இருக்கிறதாம்.

மூளை கொஞசம் ஓவரா வளர்ந்தாலே இப்படித்தான் யோசிக்க வைக்கும் போல...!

English summary
Known as “the queen of shitty robots”, Swedish inventor Simone Giertz builds robots to help with everyday activities – except, they don’t work. Well, mechanically they work beautifully, but her robots show we’ve got a while to go before every part of our life is automated.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X