சும்மா பேச்சுக்குத்தானே சொல்வார்கள்.. இங்கு ஒரு பாம்பு நிஜமாவே காக்காவை சாப்பிட்டிருக்கு பாருங்க!
காகத்தை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு விழுங்கும் வீடியோ வைரலாகிறது.
கான்பெர்ரா: காகங்கள் கூடுகளில் இடும் முட்டைகளை பாம்புகள் திருடி திண்ணும் என்று சும்மா ஒரு பேச்சுக்குதான் சொல்வார்கள். ஆனால் ஒரு பாம்பு காக்காவையே சாப்பிட்ட சமாச்சாரம் ஆஸ்திரேலியாவில் நடந்திருப்பது கொஞ்சம் ஷாக் தான்.

ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வரும் ஒரு பெண்ணின் வீட்டு கூரை மீதிருந்த டிவி ஆண்டனாவில் ஒரு பாம்பு உட்கார்ந்திந்தது. இந்த விஷயம் தெரியாமல் அதே வீட்டு கூரை மீது ஒரு காக்கா வந்து உட்கார்ந்தது.
காக்காவை பார்த்ததும் மலைப்பாம்பு லபக்கென பிடித்துள்ளது. இதை அந்த பெண் பார்த்து பதறிவிட்டார். அலறி கூச்சலிட்டும், பலர் வேடிக்கை பார்த்தும் ஒன்னும் வேலைக்காகவில்லை. நிறுத்தி நிதானமாக அந்த காக்காவை பாம்பு ஒன்றரை மணி நேரத்தில் முழுங்கி ஏப்பமிட்டது.

இதை வேடிக்கை பார்த்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் போட அது வைரலாகி வருகிறது. இப்போது காக்கா வந்தது பெரிய மேட்டர் இல்லை. ஆனால் பாம்பு எப்படி ஊருக்குள் அதுவும் வீட்டு கூரை மீது வந்திருக்கும் என்பதால், அந்த பெண் பயந்து போய் இது சம்பந்தமான புகாரை தந்தாராம். ஆனால் ஒருத்தரும் வந்து இன்னும் பாம்பை பிடிக்கவில்லையாம்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications