சவுதியில் இலங்கை தமிழருக்கு மரண தண்டனை.. மோடி தலையிட்டு காப்பாற்ற கோரி.. யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

யாழ்ப்பாணம்: சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞரான அனோஜன் சிவராசாவை விடுதலை செய்ய வலியுறுத்தி, யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று அமைதியான கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் முடிவில், அனோஜனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

வேலை தேடி தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்த இளைஞர்கள் பலரும் சவுதி அரேபியாவுக்கு செல்கிறார்கள். குறிப்பாக தென் தமிழகம், இலங்கையில் இருந்து அதிகளவில் இளைஞர்கள் சவுதி செல்கிறார்கள். இருப்பினும், அங்குள்ள உள்ளூர் விதிகள் முறையாக தெரியாததால் அவர்கள் செய்யும் சிறு விஷயங்கள் கூட பெரிய சிக்கலில் அவர்களை சிக்க வைத்துவிடுகிறது.

Sri Lankan Tamil Youth Death Sentence in Saudi Arabia Sri Lankan Tamil Youth Saudi Arabia

மரண தண்டனை

அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. இலங்கை கிழக்கு மாகாணத்தின் கல்முனை அருகே உள்ள நட்பிட்டிமுனையைச் சேர்ந்தவர் அனோஜன் சிவராசா. இலங்கை தமிழ் இளைஞரான அவர் வேலைக்காக சுமார் 9 மாதங்களுக்கு முன்பு சவுதி அரேபியா சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் அவர் குறிப்பிட்ட மதத்தை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, சவுதி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அவரை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று அமைதியான கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. அனோஜனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலையிட்ட உதவ வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்கள்

வடக்கு மாகாண ஐயப்ப இந்து அமைப்பு நடத்திய இந்த அமைதியான போராட்டம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக நடைபெற்றது. அங்கிருந்து பேரணியாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் சென்றனர். பிரதமர் மோடிக்கு வழங்குவதற்கான கோரிக்கையை இந்திய துணை தூதரகத்தில் வழங்கினர்.

வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணையத்தின் தலைவர் தரணீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தேசிய மகா சபையினர், முஸ்லீம் சகோதரர்கள், கிழக்கு மாகாண ஐயப்ப சுவாமி அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

குழப்பம்

குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் வகையில் போஸ்ட் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் அனோஜன் சிவராசாவுக்கு முதலில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 30 லட்சம் சவூதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பின்னர் தண்டனை மரண தண்டனையாக அதிகரிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு கூறியிருக்கிறார். இதுவே குழப்பத்திற்கு காரணம்!

மரண தண்டனை தொடர்பான எழுத்துப்பூர்வமான நீதிமன்ற தீர்ப்பு இதுவரை இலங்கை அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனால் இலங்கை தமிழருக்கு என்ன தண்டனை என்று தெளிவில்லாமல் குழப்பம் இருக்கிறது.

மேல்முறையீடு

அதேநேரம் சவூதி அரேபிய உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் அனோஜனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அனோஜனின் குடும்பத்தினர், இலங்கை தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் இணைந்து மேல்முறையீட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

மனிதாபிமான அடிப்படையில் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இலங்கையில் தொடர்ந்து வலுத்து வருகிறது. மேலும், இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்ற கோரிக்கையையும் இலங்கை எதிர்க்கட்சி எம்பி மனோ கணேசன் முதலில் எழுப்பியிருந்தார். அதைத் தொடர்ந்தே இந்த போராட்டம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+