For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினமும் வகுப்புக்கு வந்து பாடத்தை கவனித்த நாய்: விஷம் வைத்து கொன்ற சீன பல்கலைக்கழக அதிகாரிகள்

By Siva
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீனாவில் பிரபல பல்கலைக்கழகத்தில் தவறாமல் வகுப்புகளுக்கு வந்து பாடத்தை கவனித்த நாயை பல்கலைக்கழக அதிகாரிகள் விஷம் வைத்து கொன்றுள்ளனர்.

சீனாவின் ஷான்க்சி மாகாணம் யாங்ளினில் உள்ளது நார்த்வெட்ஸ்ட் ஏ அன்ட் எப் பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரிந்த காஸ்பர் என்ற நாய் மாணவர்களுடன் வகுப்பறைகளில் அமர்ந்து பாடத்தை கவனித்து வந்தது. இதனால் அந்த நாய் மாணவர்கள் மத்தியில் பிரபலம் ஆனது. மேலும் இணையதளத்திலும் இந்த செய்தி வேகமாக பரவி காஸ்பர் மிகவும் பிரபலம் ஆனது.

Stray dog who attended Chinese students lectures is poisoned by University officials

இந்நிலையில் பல்கலைக்கழக அதிகாரிகள் காஸ்பருக்கு விஷம் வைத்துக் கொன்று குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். காஸ்பர் வகுப்பறைக்கு வருவதால் பல்கலைக்கழகத்தின் பெயர் கெடுகிறது என்று கருதப்பட்டதால் நாயை கொன்றுவிட்டனர் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகையில்,

நாங்கள் பல நாய்களை கொன்றோம். அவை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தன என்றார்கள்.

English summary
China's Northwest A&F University has allegedly poisoned a stray dog that used to attend lectures at the university.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X