பில் ஹியூக்ஸ் காயமடைந்து சரிந்து விழுந்த பிட்சுக்கு ஓய்வு!
சிட்னி: ஆஸ்திரேலியா வீரர் பிலிப் ஹியூக்ஸ், பவுன்சர் பந்து தாக்கி படுகாயமடைந்து கீழே விழுந்த பிட்ச்சுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இனிமேல் அந்த பிட்ச் பயன்படுத்தப்பட மாட்டாது என்று சிட்னி கிரிக்கெட் மைதான நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சிட்னி மைதானத்தின் 7வது பிட்ச் இது. 22 யார்டு நீளமுள்ள அந்த பிட்ச்சில்தான் தலையில் பந்து பட்டு படுகாயமடைந்த நிலையில் கீழே விழுந்தார் ஹியூக்ஸ் என்பதால் அந்த பிட்ச்சை இனிமேல் பயன்படுத்துவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிட்னி மைதானத்தில் மொத்தம் 10 பிட்ச்சுகள் உள்ளன. அதில் 7வது பிட்ச்சில்தான் ஹியூக்ஸ் படுகாயமடைந்து விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிட்னி மைதான கியூரேட்டர் டாம் பார்க்கர் கூறுகையில், குறிப்பிட்ட அந்த பிட்ச்சுக்கு ஓய்வு தர முடிவு செய்துள்ளோம். அந்த பிட்ச்சில் ஆட எந்த வீரரும் முன்வர மாட்டார்கள். அனைவரின் மனதையும் துயரம் இன்னும் கவ்வியுள்ளது. எந்த ஒரு வீரரும் மரணமடைவதை நான் விரும்பவில்லை. நான் தயாரித்த பிட்ச்சில் யாரும் தங்களது ரத்தத்தை சிந்த நான் விரும்ப மாட்டேன்.
நடந்தது அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்த நினைவு அவ்வளவு சீக்கிரமாக யாரையும் விட்டு அகலாது. எனது ஊழியர்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எனவேதான் அந்த பிட்ச்சை பயன்படுத்துவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம் என்றார் அவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications