For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேஸ்புக்கில் அக்கவுண்ட் தொடங்கிய பெண் கோர்ட் உத்தரவுப்படி கல்லால் அடித்துக் கொலை

Google Oneindia Tamil News

Syrian girl stoned to death for joining Facebook
டமாஸ்கஸ்: பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கிய காரணத்துக்காக பெண் ஒருவர் சிரியா நீதிமன்ற உத்தரவுப்படி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சாப்பிட்டு விட்டு வருகிறேன், தூங்கப் போகிறேன் என கொட்டாவி விடுவது முதற்கொண்டு சிலர் பேஸ்புக்கில் அப்டேட் செய்கிறார்கள். சிலர் இவற்றிற்கெல்லாம் ஒருபடி மேலே போய் தற்கொலை செய்து கொள்வதைக் கூட பேஸ்புக்கில் பரிமாறிக் கொள்கிறார்கள். பாஸ்புக் இல்லாதவர்கள் கூட பேஸ்புக்கில் இருக்கிறார்கள். அந்தளவுக்கு பேஸ்புக் மனிதர்களின் வாழ்க்கையோடு ஒருங்கிணைந்து விட்டது.

இப்படி ஒருபுறம் மனிதர்கள் பேஸ்புக்கோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்க, சிரியாவிலோ பேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்ததற்காக பெண் ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்பதைக் கேட்கும்போது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

சிரியாவின் ராக்கா சிட்டியை சேர்ந்த அல் ஜஸ்ஸிம் என்றப் பெண் மீது ஜஸ்ஸிம் இஸ்லாமிக் தீவிரவாதிகள் பேஸ்புக் தளத்தில் அக்கவுண்ட் தொடங்கினார் எனக் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து, அப்பெண் அல்-ரெக்வா கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, பேஸ்புக் அக்கவுண்ட் முறையற்ற பாலியல் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று கூறி அவருக்கு மரண தண்டனை விதித்தார். அதனைத் தொடர்ந்து அப்பெண் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

English summary
While you were busy liking someone's post or uploading that cute photograph of your puppy, a young Syrian girl was reportedly being stoned to death in Syria. Her crime? She had opened a Facebook account.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X