For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தைவான்: வாலிபர் உயிரை பறித்த இண்டர் நெட் வீடியோ கேம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

தைபே: தைவான் நாட்டில் இடைவிடாமல் மூன்றுநாட்கள் இன்டர்நெட்டில் வீடியோ கேம் விளையாடிய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டில் வசித்து வரும் சியே என்ற வாலிபர், கௌசியுங் நகரில் உள்ள இன்டர்நெட் கபே ஒன்றிற்கு வீடியோ கேம் விளையாட வருவது வழக்கம். தினமும் வருவதால் அங்குள்ள ஊழியர் முதல் மேனேஜர் வரை அனைவருடனும் அவருக்கு நல்ல பழக்கம் இருந்து வந்தது.

Taiwan man died after playing computer game non-stop for 40 hours

இந்நிலையில் இன்டர்நெட் கபேக்கு நேற்று வந்த சியே தனது இருக்கையில் அசைவற்றுக்கிடந்தார். வழக்கமாக வீடியோ கேம் விளையாடிய அசதியில் சியே அப்படி தூங்குவார் என்பதால், அவரை பார்த்த ஊழியர்கள் அவர் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்றே நினைத்தனர்.

ஆனால் நீண்ட நேரமானதால் சந்தேகமடைந்த ஊழியர்கள் அவர் அருகே சென்று சோதித்தனர். அப்போது அவரது மூச்சு நின்றுபோனதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள் சியேவின் இதயம் செயலிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் 32 வயதான சியே தொடர்ந்து மூன்று நாட்களாக தொடர்ந்து வீடியோ கேம் விளையாடியதே அவரது மரணத்திற்கு காரணமென்றும் தெரிவித்தனர்.

இதேபோல் புதிய தைபே நகரத்தில் உள்ள இன்டர்நெட் கபே ஒன்றில் இதே போல் 38 வயதான நபர் ஒருவர் ஐந்து நாட்கள் தொடர்ந்து வீடியோ கேம் விளையாடிய பிறகு கடந்த 1ஆம் தேதி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
An 32-year-old collapsed and died at an internet café in Taiwan after playing an online computer game for 36 hours straight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X