"ராஜதந்திரம்".. கடைசி நேரத்தில் அமெரிக்கா செய்த தரமான சம்பவம்.. ஆத்திரத்தில் தாலிபான்கள்..!
தாலிபான்கள் அமெரிக்கர்கள் மீது கடும் கோபத்தில் உள்ளார்களாம்
காபூல்: காபூலை விட்டு போகும்போது, ஏர்போர்ட்டை நாசம் செய்துவிட்டு போய்விட்டார்கள், 73 விமானங்களை பயன்படுத்தவே முடியாத அளவுக்கு அழித்து விட்டு போய்விட்டார்கள் என்று தலிபான்கள் அமெரிக்கா மீது குற்றம்சாட்டி புலம்பி உள்ளது.
Recommended Video
கடந்த 20 வருடங்களாக அமெரிக்கா எடுத்து கொண்ட அத்தனை முயற்சிகளும் தாலிபான்களிடம் தோற்று போய்விட்டது..
தாலிபான்களை முழுமையாக ஒழிக்க முடியாமல் தடுமாறவும் செய்தது... இறுதியில் ஆப்கனை விட்டு வெளியேற அமெரிக்க அரசு முடிவு செய்தது.

ஆப்கன்
அதற்கேற்றபடி, அமெரிக்க படையினர் நாட்டை விட்டு வெளியேற தாலிபன்கள் கெடு வைத்தனர்.. ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் வெளியேறுமாறு சொன்னார்கள், ஆனால், ஒரு நாள் முன்னதாகவே அமெரிக்க படைகள் ஆப்கனை விட்டு வெளியேறிவிட்டன... எல்லாரும் சென்றபிறகு, தாலிபான்கள் முழு சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.. ஆட்சி அமைப்பது குறித்த பிஸியில் தாலிபான்கள் ஈடுபட்டும் வருகின்றனர்.

தாலிபான்கள்
இப்படிப்பட்ட சமயத்தில்தான் ஒரு அதிர்ச்சி சம்பவம் தாலிபான்களுக்கு தெரியவந்துள்ளது.. காபூல் ஏர்போர்ட்டில் இருந்துதான் அமெரிக்க படையினரின் கடைசி ராணுவ விமானம் வெளியேறியது.. அப்போது, அந்த விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் அமெரிக்க வீரர்கள் நாசம் செய்துவிட்டார்களாம்..

ஏவுகணைகள்
ஆப்கனில் இருந்து வெளியேறுவதற்கு கெடு விதிக்கப்பட்டுவிடவும், தங்களின் தளவாடங்களை முழுமையாக அமெரிக்க படையினர் எடுத்து செல்வதற்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என்பதாலும், தங்கள் நாட்டு ராணுவ தளவாடங்கள் தாலிபான்களுக்கு எக்காரணம் கொண்டும் கிடைத்து விடக்கூடாது என்பதாலும், சினூக் ஹெலிகாப்டர்களையும், ஹம்வீக் ஏவுகணைகளையும் செயலிழக்க செய்துவிட்டனராம் அமெரிக்க படையினர்..!

கொந்தளிப்பு
இதை பார்த்துதான் தாலிபான்கள் கொந்தளித்து போயுள்ளனர்.. அந்த விமானங்களையும், ஹெலிகாப்டர்களையும் தாங்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தாலிபான்கள் கணக்கு போட்டிருந்தார்கள் போலும்.. ஆனால் மொத்த கணக்கையும் அமெரிக்க வீரர்கள் நொறுக்கிவிட்டனர்.. அந்த விமானங்களை பயன்படுத்த முடியாத அளவுக்கு செயலிழக்க செய்துவிட்டு சென்றுள்ளார்கள் அமெரிக்க வீரர்கள்... ஏர்போட்டையும் நாசம் செய்துவிட்டார்களாம். இதனால் கடுப்பாகிவிட்டனர் தாலிபான்கள்.

வாகனங்கள்
இதை பற்றி அமெரிக்க ஜெனரல் கென்னத் மெக்கன்சி சொல்லும்போது, "காபூல் ஏர்போர்ட்டில் இருக்கும் 73 ராணுவ விமானங்களை அமெரிக்க படையினர் செயலிழக்க செய்துவிட்டனர்.. அதை இனிமேல் பயன்படுத்தவும் முடியாது.. அந்த விமானங்களை பறக்க வைக்கவும் முடியாது.. இப்படித்தான் 27 ஹம்வீ வாகனங்களையும், 74 எம்ஆர்ஏபி கவச வாகனங்களும் பயன்படுத்த முடியாத அளவுக்கு செயலிழக்க செய்துவிட்டனர்..

அதிர்ச்சி
அதேபோல சி-ராம்ஸ் (C-RAMS) என்ற ராக்கெட் எதிர்ப்பு அமைப்பையும் செயலிழக்க வைத்துவிட்டனர்.. வெளியேறுவதற்கு கடைசி நிமிஷத்தில் இதை செய்திருக்கிறார்கள்" என்று புலம்பி கொண்டே சொல்கிறார்.. அமெரிக்காவின் இந்த ராஜதந்திரத்தை கண்டு தாலிபான்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளார்கள். இது முதல் தடவை இல்லை..

அமெரிக்க ராணுவம்
இப்படித்தான் ஒசாமா பின்லேடன் ஆப்ரேஷனின்போதும் நடந்தது.. ஆதாவது, ரேடாரை ஏமாற்றும் நவீன சாப்பர் (30 பேர்களுக்கு மேல் செல்லும் நவீன ரக ஹெலிகாப்டர்) மூலம் பாகிஸ்தானுக்குள் பாகிஸ்தான் ராணுவத்துக்கே தெரியாமல் புகுந்தது அமெரிக்க ராணுவம்... சத்தமில்லாமல் பறக்கும் அந்த சாப்பர்களில் ஒன்று திடீரென ரிப்பேர் ஆகிவிட்டது.. பிறகு ஒசாமை கொன்று உடலைக்கைப்பற்றி கிளம்பிய அமெரிக்க ராணுவம், அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு செய்த முதல் காரியமே, அந்த பழுதான சாப்பரை குண்டு போட்டு அழித்ததுதான்..

ராஜதந்திரம்
ஏனென்றால், அப்படியே அந்த சாப்பரை விட்டு விட்டு போனால், அதன் டெக்னாலஜியை பாகிஸ்தான் ராணுவம் எளிதாக கண்டறிந்துவிடும்.. அதனாலேயே அழித்து விட்டுபோனார்கள்.. இப்போதும், அப்படி ஒரு ராஜதந்திரத்தைதான் அமெரிக்கர்கள் கையாண்டுள்ளார்கள்.. இதனால் அப்படியே அதிர்ந்து போய் உள்ளார்களாம் தாலிபான்கள்..!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications