For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சீனாவில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டம்!

By Shankar
Google Oneindia Tamil News

பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் தமிழ் சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது.

தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் வாழும் ஏராளமான தமிழர்கள், அங்கெல்லாம் தங்கள் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் விடாமல் கொண்டாடி வருகின்றனர்.

Tamil new year celebrations in China

சீனாவிலும் தமிழர்கள் வசிக்கின்றனர். 1963-லிருந்து சீன வானொலி தமிழ் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது.

தலைநகர் பெய்ஜிங் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பணிபுரியும் தமிழர்கள் சிலர் சேர்ந்து கடந்த 2013-ம் ஆண்டு பெய்ஜிங் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினார்கள். தற்போது அந்த சங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த தமிழ் சங்கத்தின் சார்பில் வருகிற 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு தினம் ஆகும். இதனை முன் கூட்டியே பெய்ஜிங் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அங்கு தமிழ் புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பெய்ஜிங் நகரில் பணிபுரியும் தமிழர்கள், அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழ் மாணவர்கள், சீன சர்வதேச வானொலியின் தமிழ் பிரிவில் பணியாற்றும் தமிழர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் பல கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

English summary
Tamil New year was celebrated in Chinese capital Beijing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X