For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. வழக்கில் கர்நாடகா மேல்முறையீடு செய்ய 'ஒபாமாவுக்கான தமிழர்' அமைப்பு எதிர்ப்பு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

நியூயார்க்: ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய கூடாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவை அமெரிக்காவின் 'ஒபாமாவுக்கான தமிழர்கள்' அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கடந்த மாதம் 11ம் தேதி கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சிகள் கோரிக்கைவிடுக்கும் நிலையில், ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்போ, கர்நாடக முதல்வர் சித்தராமையா, இந்த விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய கூடாது என்று கூறியுள்ளது.

இதுகுறித்து அவ்வமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதற்கு இவ்வழக்கு ஒரு நல்ல உதாரணம். இந்த வழக்கே தொடரப்பட்டிருக்க கூடாது. நீதிபதி குமாரசாமி, சரியான நேரத்தில், வழக்கை டிஸ்மிஸ் செய்துள்ளார்.

உதாரணத்துக்கு, 1994ம் ஆண்டு, ஒரு சதுர மீட்டருக்கான மார்பிள் செலவு ரூ.5ஆயிரம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதை குமாரசாமி ஒப்புக்கொள்ளவில்லை. அக்காலகட்டத்தில் ரூ.100 முதல் ரூ.150க்குள்தான் இருந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நாங்கள் ஜெயலலிதாவை மதிக்கிறோம். தமிழகத்திலுள்ள ஏழைகளுக்கு ஜெயலலிதா மிகுந்த உதவிகள் செய்துள்ளார். ஜெயலலிதா, சிறப்பான நிர்வாகி. அவரது நிர்வாகத்தால், தமிழக பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா கட்சி அமோக வெற்றி பெற்றது.

ஜெயலலிதாவுக்கு இலங்கை உள்ளிட்ட வெளிநாடு வாழ்கின்ற தமிழர்களிடம் நல்ல புகழ் உள்ளது. இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தியது உள்ளிட்ட இலங்கை தமிழர் நலன் சார்ந்த விவகாரங்களில் ஜெயலலிதா அவர்களின் மனதை கவர்ந்துள்ளார். இதுபோன்ற காரணங்களால், சித்தராமையா, மேல்முறையீடுக்கு செல்லாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஓபாமாவுக்கான தமிழர்கள், அமைப்பு, அமெரிக்கா வாழ் தமிழர்களிடம் அரசியல் தொடர்புள்ள ஒரு அமைப்பாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இனப்படுகொலை செய்த இலங்கைக்கு எதிராக இந்த அமைப்பு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.

English summary
Jayalalithaa, the CM of Tamil Nadu, spent some time in jail as a result of a conviction by the Karnataka court. Now the case has been dismissed on appeal and Tamils for Obama urges Siddaramaiah to let the dismissal stand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X