தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்கள்.. களமிறங்கிய ஸ்பேஸ் எக்ஸ்.. கைகொடுக்கும் எலோன் மஸ்க்
பாங்காக்: தாய்லாந்து குகைக்குள் மாட்டிய 12 பள்ளி கால்பந்து அணி வீரர்கள், 1 பயிற்சியாளரை மீட்க எலோன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடந்த 10 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.
நேற்றுதான் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் அவர்களுக்கு புதிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது.

என்ன முறை
குகையின் வேறு பகுதியில் துளையிட்டு அதுவழியாக தண்ணீரை உறிஞ்சி எடுத்துவிட்டு, மாணவர்களை வெளியே கொண்டு வரலாம் என்று முடிவெடுத்துள்ளனர். உள்ளே இருப்பவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் குகையை குடாய முடிவெடுத்துள்ளனர். அதேபோல் கடலில் சாகசம் செய்ய கூடிய 13 வீரர்கள் களமிறங்கி உள்ளனர். அந்த 13 பேரும் தாய்லாந்து குகையின் பக்கத்தில் வந்துள்ளனர். அவர்களும் உதவ வாய்ப்புள்ளது.

யார் இவர்
இந்த நிலையில் இந்த பிரச்சனையில் எப்படி தீர்வு காண்பது என்று தெரியாமல் எல்லோரும் குழம்பிக் கொண்டு இருந்த நேரத்தில்தான், உலகின் மிக முக்கியமான புத்திசாலிகளில் ஒருவர் என்று கருத்தப்படும் எலோன் மஸ்க் களத்தில் குதித்து இருக்கிறார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவரான இவர்தான் தன்னுடைய டெஸ்லா நிறுவன காரை செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு மாதம் முன்பு அனுப்பியது.

பொறியாளர்கள் உதவி
இந்த நிலையில் அவர், தற்போது தன்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் பொறியாளர்களை, இத வேலைக்கு அனுப்ப இருக்கிறார். குகையை குடைந்து, சிறுவர்களை மீட்க அவர் பொறியாளர்களை அனுப்பி உள்ளார். அவர்கள், குகைக்குள், துளை போடும்போது மற்ற பாகங்கள் உடையாமல் எப்படி துளை போடுவது என்று ஆலோசனை வழங்குவார்கள். இன்று காலை அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அதேபோல் தன்னுடைய சாட்டிலைட் தகவல்களை அவர் உதவிக்கு வழங்கி வருகிறார்.

பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்
விண்வெளி வீரர்களையும் அவர் இந்த பணிக்கு அனுப்பி இருக்கிறார். அவர்கள்தான், எவ்வளவு ஆழமான நீரிலும், மோசமான காலநிலையில் உயிருடன் இருக்க பயிற்சி எடுத்தவர்கள். இவர்கள் எளிதாக சிறுவர்களை காப்பாற்றுவார்கள் எனபதால் அவர்களை அனுப்பி இருக்கிறார். அவரின் இந்த செயலுக்கு எல்லோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!