தாய்லாந்து சிறுவர்களை காப்பாற்ற நேரடியாக சென்ற எலோன் மஸ்க்.. குகைக்குள் சென்று ஆய்வு

பாங்காக்: தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலோன் மஸ்க் நேரடியாக குகைக்குள் சென்று பார்வையிட்டு இருக்கிறார். இதைப்பற்றிய வீடியோ வெளியாகி உள்ளது.
தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க, எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் சிறிய நீர்முழ்கி கப்பல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களில் 13 பேரில் இதுவரை 8 சிறுவர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள்.
சிக்கலான குகைகளில் ஒன்றான தாய்லாந்தில் இருக்கும் தி தம் லுஅங் குகை என்ற மிகவும் குறுகலான குகைக்குள் தாய்லாந்தை சேர்ந்த 13 பள்ளி கால்பந்து வீரர்கள் மாட்டினார்கள். கடந்த 16 நாட்களாக அவர்கள் உள்ளேயே இருக்கிறார்கள்.
— Elon Musk (@elonmusk) July 8, 2018 |
நீர் மூழ்கி கப்பல் உதவி
அவர்களை மீட்க எலோன் மஸ்க் நீர் மூழ்கி கப்பலை உருவாக்கி உள்ளார். அதன்படி குறுகலான பாதைக்குள் ஆக்சிஜன் வசதியுடன் சிறுவர்களை உள்ளே சுமந்து செல்லும் வகையில், மிக சிறிய நீர் மூழ்கி கப்பலை உருவாக்கி இருக்கிறார். இதை வெளியில் இருந்து இயக்க முடியும். ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகளில் ஒன்றான, பல்கான் ஹெவி ராக்கெட் மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது.
— Elon Musk (@elonmusk) July 8, 2018 |
களத்தில் குதித்தார்
முதலில், எலோன் மஸ்க் தன்னுடைய பணியாளர்களை மட்டுமே பயன்படுத்துவதாக இருந்தது. ஆனால் அதன்பின் எலோன் அவராகவே களத்தில் குதித்து இருக்கிறார். தன்னுடைய குழுவினருடன், அவர் தாய்லாந்து சென்றுள்ளார். இதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்து அவர் தாய்லாந்திற்கு அவசர அவசரமாக சென்றுள்ளார்.
|
குகை
அதோடு இல்லாமல் அவர் நேற்று இரவு குகைக்குள் சென்று இருக்கிறார்.நேற்று குகைக்குள் புதிய ஆக்சிஜன் சிலிண்டர்கள் பொருத்தும் வேலை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. இதற்காக அவர் மீட்பு பணியாளர்களுடன் குகைக்குள் சென்றுள்ளார். இதுகுறித்து அவர் வீடியோவும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை
இந்த நிலையில் எலோன் மஸ்க்கின் இந்த கண்டுபிடிப்பை தாய்லாந்து அரசு பயன்படுத்துமா என்று தெரியவில்லை. இதுகுறித்து அந்நாட்டு அரசு இதுவரை எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் எலோன் மஸ்க் நம்பிக்கையாக, அவரது புதிய கண்டுபிடிப்பை அந்த குகைக்குள் கொண்டு சென்றுள்ளார். இதை பயன்படுத்துவார்களா என்று இன்று தெரிவிக்கப்படும்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!