For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொடரும் அமெரிக்க தாக்குதல்.. காபூல் ஏர்போர்ட் அருகே தீவிரவாதிகளின் வெடிகுண்டு நிரப்பிய கார் தகர்ப்பு

Google Oneindia Tamil News

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை குறி வைத்து அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

Recommended Video

    India, America உடன் இணைந்து பணியாற்றியவர்களை தேடிட்டு இருக்கோம் - Taliban அறிவிப்பு

    காரில் வெடிகுண்டுகளை நிரப்பிக்கொண்டு காபூல் விமான நிலையத்தை மீண்டும் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டதால் அமெரிக்கா இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக கூறியுள்ளது.

    ஆனால் அமெரிக்கா நடத்திய இந்த வான்வழி தாக்குதலில் கட்டிடம் ஒன்று சேதமடைந்ததாகவும், அதில் குழந்தைகள் உட்பட பலர் பலியானதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

     இந்தியாவில் கலீபா ஆட்சி.. ஆப்கனில் தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்- வெளியான பரபரப்பு தகவல்கள் இந்தியாவில் கலீபா ஆட்சி.. ஆப்கனில் தாக்குதல் நடத்திய ஐஎஸ்ஐஎஸ்-கே திட்டம்- வெளியான பரபரப்பு தகவல்கள்

    தாலிபான்கள்

    தாலிபான்கள்

    காபூல் விமான நிலையத்தை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். விமான நிலையத்தின் மூன்று கேட்களை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வெளியேறும் மக்கள்

    வெளியேறும் மக்கள்

    மேலும் காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் பாதைகளில் சோதனைச் சாவடிகளை அமைத்து தலிபான்கள் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நாட்டை விட்டு வெளியேற விரும்பும் மக்கள் காபூல் விமான நிலையத்தை சுற்றிலும் உள்ள, முகாம்களில் தங்கியுள்ளனர்.

    ட்ரோன் தாக்குதல்

    ட்ரோன் தாக்குதல்

    காபூலில் சில தினங்கள் முன்பு ஏர்போர்ட் அருகே நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் பலியாகினர். இதற்கு பொறுப்பேற்றது ஐஎஸ்ஐஎஸ்-கே பயங்கரவாத அமைப்பு. எனவே அந்த அமைப்பின் முக்கிய தலைவர்களை குறி வைத்து அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க அதிபர்

    அமெரிக்க அதிபர்

    இதனிடையே அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட 13 ராணுவ வீரர்களின் உடலுக்கு அதிபர் ஜோ பிடன் அஞ்சலி செலுத்தியுள்ளார். அமெரிக்காவின் டென்வர் மாகாணத்திலுள்ள டோவர் விமானப்படைத் தளத்துக்குச் தனது மனைவி ஜில் பைடனுடன் சென்ற அவர் மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அமெரிக்க தகவல்

    அமெரிக்க தகவல்

    "அமெரிக்க ராணுவப் படைகள் இன்று காபூலில் ஒரு வாகனத்தின் மீது தற்காப்புக்காக ஆளில்லா வான்வழித் தாக்குதலை நடத்தியது, [ஹமீத்] கர்சாய் சர்வதேச விமான நிலையத்திற்கு ISIS-K அமைப்பால் ஏற்படவிருந்த அச்சுறுத்தலை இந்த தாக்குதல் நீக்கியது. நாங்கள் இலக்கை வெற்றிகரமாக தாக்கினோம். வாகனத்தில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியுள்ளன" என்று அமெரிக்க மத்திய செய்தித் தொடர்பாளர் கேப்டன் பில் அர்பன் கூறினார். இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் இருவர் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    English summary
    The United States has launched an attack on a car belonging to ISIS-K loaded with bombs in the Afghan capital, Kabul.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X