கோடீஸ்வரனாக்கிய "ஒர்க் பிரம் ஹோம்.." ஒரே நேரத்தில் 6 கம்பெனிகளில் வேலை பார்த்து சம்பாதித்த இளைஞர்
ரோம்: வீட்டிலிருந்தே வேலை என்ற நடைமுறையால் கோடீஸ்வரனாக மாற ஒரே சமயத்தில் 6 முழுநேர பணிகளை செய்வதாகவும், இந்த ஆண்டு ரூ.5 கோடி சம்பாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறும் ஐரோப்பா இளைஞர், 40 வயதில் ஓய்வு பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலால் அனைவரின் பணிச்சூழலும் மாறியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய உத்தரவிட்டன. இது நன்றாக இருப்பதாக ஒரு தரப்பினரும், அலுவலகத்தில் பணி செய்வது போன்ற வசதி இல்லை என இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில நிறுவனங்களில் மட்டும் வீட்டில் இருந்து ஊழியர்கள் பணி செய்யும் நிலை உள்ளது. இந்நிலையில் தான் வீட்டில் இருந்து பணி செய்யும் நபர் ஒருவர் ஒரே சமயத்தில் 6 இடங்களில் வேலை செய்வது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:

ஒரே சமயத்தில் 6 முழுநேர பணி
‛ரெட்டிட்டர்' இணையதளத்தில் இளைஞர் ஒருவர் தனது பணி அனுபவம் குறித்த விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
நான் ஐரோப்பாவை சேர்ந்தவன். ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். கொரோனா காலத்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த காலக்கட்டம் என்னை 2வது தொழில் செய்யும்படி உந்தி தள்ளியது. முயற்சித்ததன் மூலம் நான் தற்போது 6 பணிகளை ஒரேநேரத்தில் செய்து வருகிறேன். இந்த பணிகள் அனைத்து முழுநேர பணிகளாகும். வீட்டில் இருந்து வேலை செய்வதாலே இது சாத்தியமானது.

ரூ.5.27 கோடி
இந்த ஆண்டு நான் 700 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.5.27 கோடி) சம்பாதித்து விடுவேன். 40 வயதிற்குள் கோடீஸ்வரனாக மாறி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளேன். இந்த கனவை நினைவாக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். என் நிறுவனத்தினர் என்னை ஒரு டெவலப்பர் என்ற அளவில் மட்டுமே வைத்துள்ளனர். இந்த பணியை திறமையாக செய்வேன். நான் மற்றவர்களுடன் அதிகமாக நேரம் செலவிடுவது கிடையாது. இதனால் நிறுவனமும் என்னை கண்டுக்கொள்ளாது'' என குறிப்பிட்டுள்ளார்.

பாராட்டும், விமர்சனமும்
இவரது இந்த பதிவை பலர் பாராட்டுகின்றனர். சிலர் விமர்சனம் செய்கின்றனர். அதாவது ஒரே சமயத்தில் ஆறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் திறனும், கடும் உழைப்பும் இருப்பதாக இருப்பத குறித்து பலர் பாராட்டினாலும், நேர்மை தவறுவதாக சிலர் விமர்சிக்கின்றனர்.

6 வேலையா...
இதில் ஒருவர் ‛‛ஆறு வேலையா... அடடா.... இதுபற்றி எனக்கு சில டிப்ஸ் தரலாமா, ப்ளீஸ்? ஏனென்றால் நான் வேலை கிடைக்காமல் கஷ்டப்படுகிறேன்" என கூறியுள்ளார். இன்னொரு நபரோ, "இவர் 6 வேலைகளை முழுநேரமாக செய்வார் என நினைக்கவில்லை. பார்ட் டைம் ஜாப் வேண்டுமானால் செய்ய வாய்ப்புள்ளது. மேலும் அவர் கூறிய ஊதிய சம்பாதிப்பும் மிகைப்படுத்தி கூறியதாக தெரிகிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications