"2018ம் ஆண்டின் வார்த்தை".. எது தெரியுமா.. இதோ இதுதான்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    '2018ம் ஆண்டின் வார்த்தை' இதோ இதுதான்!

    கேம்பிரிட்ஜ்: 2018ம் ஆண்டின் பிரபலமான வார்த்தையை கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி வெளியிட்டுள்ளது. அந்த வார்த்தையின் பெயர் 'Nomophobia'.

    இந்த வார்த்தைக்கான அர்த்தம் இதுதான் - செல்போன் கையில் இல்லாமல் போனாலோ அல்லது செல்போனில் சார்ஜ் தீர்ந்து விட்டாலோ அல்லது செல்போனை பயன்படுத்த முடியாமல் அது ஸடக் ஆகி விட்டாலோ அல்லது சிக்னல் கிடைக்காவிட்டாலோ வரும் பயம்தான் 'Nomophobia'.

    Nomophobia.. No Mobile phone Phobia.. இதுதான் இந்த வார்த்தையின் விரிவாக்கம். கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி தனது பிளாக் வாசகர்களிடமும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் இந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டிருந்தது.

    நோ மொபைல் போன் போபியா

    நோ மொபைல் போன் போபியா

    அதன் இறுதியில் பல வார்த்தைகளைப் பரிசீலித்து அதிக ஆதரவைப் பெற்ற 'Nomophobia' வார்த்தையை இந்த ஆண்டின் வார்த்தையாக கேம்பிரிட்ஜ் தேர்வு செய்துள்ளது.

    இறுதிச் சுற்றில் 4

    இறுதிச் சுற்றில் 4

    இந்த ஆண்டின் சிறந்த வார்த்தை போட்டியின் கடைசியில் நான்கு வார்த்தைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மக்களிடையே நிலவும் பிரபலம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் வார்த்தைகள் இறுதிக் கட்டத்திற்குத் தேர்வாகின.

    கூட்டு வார்த்தை

    கூட்டு வார்த்தை

    நான்கு வார்த்தைகளின் கூட்டுதான் இந்த Nomophobia.. மிகப் பொருத்தமான முறையில் கலந்துள்ள வார்த்தைகளின் கூட்டணியான இது மக்களிடையே பிரபலமாகவும் உள்ளதால் அதன் அடிப்படையில் இதை 2018ம் ஆண்டின் வார்த்தையாக கேம்பிரிட்ஜ் அறிவித்துள்ளது.

    3 மற்ற வார்த்தைகள்

    3 மற்ற வார்த்தைகள்

    Nomophobiaவுடன் போட்டியில் இருந்த மற்ற 3 வார்த்தைகள் gender gap, ecocide மற்றும் no-platforming. ஜென்டர் கேப் அனைவருக்கும் அர்த்தம் தெரியும். ஈகோசைட் என்பது சுற்றுச்சூழல் அழிவு என்பதைக் குறிக்கும் வார்த்தை. கிட்டத்தட்ட சூசைட் போன்ற அர்த்தம். நோ பிளாட்பார்மிங் என்பது, ஒவரது சிந்தனை அல்லது யோசனையை செயல்படுத்தவோ அல்லது ஏற்கனவோ இடம் கொடுக்காமையை குறிக்கும் வார்த்தையாகும்.

    அப்புறம், உங்களுக்கு இருக்கா "ல் த கா சை ஆ".. ஸாரி.. Nomophobia??

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+