For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாரத்தான் வீரர்களுக்காக... கழுத்தில் அமர்ந்து ஊட்டச்சத்தை ஊட்ட வரும் "தக்காளி சீனிவாசன்"!

Google Oneindia Tamil News

டோக்கியோ: கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்சை தொடர்ந்து சந்தையை கலக்க வருகிறது ஜப்பானின் தக்காளி ரோபோ.

கூகுள் கிளாஸ், ஆப்பிள் வாட்ச் என உடலில் அணிந்து கொள்ளும் தொழில்நுட்ப சாதனங்கள் உலகைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று வித்தியாசமாக கழுத்தில் அணிந்து கொள்ளும் வித்தியாசமான ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளது.

மாரத்தன் வீரர்களுக்காக பிரத்யேகமாக இந்த ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது.

டொமாடன்...

டொமாடன்...

'டொமாடன்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ரோபோவின் தலை தக்காளியை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு இரும்பு கரங்கள் கொண்டதாக உள்ள இந்த ரோபோவை கழுத்தில் பொருத்திக் கொள்ளளாம்.

மாரத்தான் வீரர்கள்...

மாரத்தான் வீரர்கள்...

மாரத்தான் போன்ற நீண்ட தூர ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்பவர்கள், தங்கள் உடல் ஆற்றலை அதிகரித்துக்கொள்ள, ஓடிக்கொண்டிருக்கும் போதே இடையிடையே எதையாவது சாப்பிடுவது வழக்கம். அவ்வாறு சாப்பிடும் போது அவர்களது நேரம் வீணாவது மட்டுமின்றி, அடிக்கடி ஆற்றல் நிறைந்த உணவுப்பொருள்களையும் எடுத்துக்கொள்ள முடியாது.

தக்காளி தரும்...

தக்காளி தரும்...

எனவே, அத்தகைய வீரர்களின் வசதிக்காக இந்த டொமாடன் ரோபோ உருவாக்கப் பட்டுள்ளது. வீரர்களின் கழுத்து பகுதியில் பொருத்தப்படும் இந்த ரோபோ, தன் சேமிப்பில் இருக்கும் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் கொண்ட தக்காளியை அவ்வப்போது, தன் இரும்புக்கரத்தால் எடுத்து ஓடுபவருக்கு ஊட்டி விடும்.

ஊட்டச்சத்து...

ஊட்டச்சத்து...

இதனால், வீரரது நேரமும் வீணாகாமல், அதே சமயம் ஊட்டச்சத்துக்களும் பெற்று அதிக ஆற்றலுடன், தொடர்ந்து வேகமாக ஓட முடியும்.

முன்னோட்டம்...

முன்னோட்டம்...

ஜப்பானில் 22-ம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட மாரத்தானில் பங்கேற்பதற்காக 'ககோமி' என்ற பழச்சாறு நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. இந்த மாரத்தானிற்கு முன்னோட்டமாக நாளை நடைபெறும் 5 கி.மீ தூரத்திற்கான ஓட்டத்தில் அந்நிறுவனத்தின் ஊழியர் சுசுகி இந்த டொமாடனுடன் கலந்து கொள்கிறார்.

பொறுத்திருந்து பார்ப்போம்...

பொறுத்திருந்து பார்ப்போம்...

முதலில் 8 கிலோ கொண்ட டொமாடனுடன் ஓடும் ஊழியர், அதற்கு அடுத்தநாலில் எடை குறைந்த, அதாவது 3 கிலோ டொமாடனுடன் போட்டியில் பங்கேற்கிறார். சுசுகிக்கு ‘டொமாடன்' எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கும் என்பது போட்டிக்குப் பிறகு தான் தெரிய வரும்.

English summary
Schemed up by the Japanese tomato-product manufacturer Kagome, the 17.6 pound, humanoid veggie-bot Tomatan will make its public debut this weekend. It'll ride upon the sturdy, lycopene-loving shoulders of company employee Shigenori Suzuki as he runs the Toyko Marathon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X