For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

37,000+ அடி உயரத்தில்.. 157 பேருடன் பறந்த ஃபிளைட்.. கன்ட்ரோல் ரூமில் அலறிய ஆபீசர்ஸ்.. ஹைலைட்டே இதான்

நடுவானில் விமானம் பறந்தபோது தூங்கிவிட்ட விமானிகளால் பதற்றம் ஏற்பட்டது

Google Oneindia Tamil News

அடிஸ் அபாபா: 2 நாட்களாகவே ஒரு திரில்லர் சம்பவம் ஒன்று இணையத்தை சுற்றி சுற்றி வருகிறது.. இந்த செய்தியை படிக்கும் அனைவருக்கும் ஒருநிமிடடம் கலக்கம் சூழ்ந்தும் விடுகிறது.

சூடானில் இருந்து எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவிற்கு, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்ET343 என்ற பிளைட் கடந்த திங்கட்கிழமை சென்றுள்ளது..

இந்த ஃபிளைட்டில் விமான பணியாளர்கள் உட்பட 157 பேர் பயணம் செய்திருக்கிறார்கள்.. விமானம் அடிஸ் அபாபா ஏர்போர்ட்டுக்கு பக்கத்திலேயே வந்துவிட்டது.. ஆனால், தரையிறங்கவில்லை.. மேலேயே சுற்றிக் கொண்டிருந்தது.

ஏர் இந்தியா விமானத்தின் மீது எத்தியோப்பியன் விமானம் மோதல்.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு ஏர் இந்தியா விமானத்தின் மீது எத்தியோப்பியன் விமானம் மோதல்.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு

 கன்ட்ரோல் ரூம்

கன்ட்ரோல் ரூம்

இதனால், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையம் என்று அழைக்கப்படும் ஏடிசி அலுவலகத்தில் இருந்து விமானத்தை உடனடியாக தரையிறக்க ஆர்டர் போனது. ஆனால், மறுமுனையில் இருந்து எந்த சத்தமும் இல்லை.. விமானிகளிடம் ஒரு தகவலும் வராததால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.. அதனால், விமானிகளை தொடர்புகொள்ள மறுபடியும் மறுபடியும் அழைத்தனர்... அப்போதும் எந்தவிதமான பதிலும் வரவில்லை..

 37000+ அடி உயரம்

37000+ அடி உயரம்

இதனால் மேலும் பதறிப்போன அதிகாரிகள், தொழில்நுட்ப வசதிகளை கொண்டு என்ன பிரச்சனை என்று உடனடியாக ஆராய்ந்தனர்.. அப்போது, விமானம் ஆட்டோமெட்டிக் தொழில்நுட்பத்தில், இயங்கி கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.. அதாவது விமானத்தை பைலட்டுகள் இயக்காமல், தானாகவே, அது பாட்டுக்கு 37,000 அடி உயரத்தில் வானில் சுற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது... இவ்வளவு உயரத்தில் பறக்கும் விமானம், ஏன் ஆட்டோமெட்டிக் மோடில் இயங்க வேண்டும்? பைலட்டுகளுக்கு என்ன ஆனது? 157 பயணிகளும் உள்ளே இருக்கிறார்களே? அவர்கள் கதி என்னாவது? என்ற டென்ஷன் கூடிவிட்டது..

 ஹைலைட்

ஹைலைட்

பிறகு, அதிகாரிகள் அபாய ஒலியை எழுப்பினர்... அதற்கு பிறகுதான், அந்த பைலட்டுகளிடம் இருந்து பதில் கிடைத்துள்ளது... கிட்டத்தட்ட 25 நிமிஷங்கள் தாமதமாக அந்த ஃபிளைட் அடிஸ் அபாபா ஏர்போர்ட்டில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.. அதிஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆட்டோமெட்டிக் மோடில் ஏன் விமானத்தை வைத்திருந்தீர்கள் என்று, அந்த பைலட்களிடம் கேள்வி எழுப்பப்பப்பட்டது..

 157 பயணிகள்

157 பயணிகள்

கடைசியில் பார்த்தால், அந்த 2 விமானிகளும், அந்தரத்தில் விமானம் பறந்து வந்து கொண்டிருந்தபோதே தூங்கிவிட்டார்களாம்.. இந்த பதிலை கேட்டு அதிகாரிகள் அதிர்ந்தனர்.. இதைவிட இன்னொரு அதிர்ச்சி என்னவென்றால், இப்போது வரை, சம்பந்தப்பட்ட அந்த பைலட்கள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.. 37,000 அடி உயரத்தில் பறந்தபோது, இப்படி நடந்ததா? என்று விஷயத்தை கேள்விப்பட்ட அந்த 157 பயணிகளும் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் வெளியே வரவில்லையாம்..!

English summary
Thrilling Incident: Ethiopian airlines pilots fall asleep on flight miss landing and what happened நடுவானில் விமானம் பறந்தபோது தூங்கிவிட்ட விமானிகளால் பதற்றம் ஏற்பட்டது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X