For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்காவிலும் குடும்ப அரசியல்: ஆட்சியில் மூக்கை நுழைக்கும் ட்ரம்ப் மருமகன்!

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவிலும் குடும்ப அரசியல் ஒன்றும் புதிதில்லை தான். ஆனாலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜெரட் குஷ்னர் விதிவிலக்காக காணப்படுகிறார்.

அதிப ஜான் எஃப் கென்னடியின் மறைவிற்கு பிறகு அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் முக்கிய பதவியில் இருந்து வந்தார்கள். அவரது தம்பியின் மறைவிற்கு பிறகு, மகளை ஜப்பான் அம்பாசிடராக ஒபாமா நியமித்தார். தீவிர அரசியலுக்கு முன்னோட்டமாக இது கருதப்பட்டது.

Trump's family in new US government

அதிபர் ஜார்ஜ் ஹெச் டபுள்யூ புஷ்ஷின் மகன் ஜார்ஜ் புஷ்ஷும் அதிபராக இருந்துள்ளார். இன்னொரு மகன் ஃப்ளோரிடாவின் கவர்னராக இருந்துள்ளார். டெக்சாஸில் லேண்ட் கமிஷனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பேரன் செனட் தேர்தலில் போட்டியிட குறி வைத்துள்ளார்.

பில் க்ளிண்டனின் மனைவி ஹிலரி க்ளிண்டனின் அரசியல் பயணம் உலகம் அறிந்தது. மகள் செல்சி க்ளிண்டனும் அரசியல் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.

முன்னாள் துணை அதிபர் டிக் செனியின் மகள் செனட்டராக இருக்கிறார். இன்னும் அடுத்த கட்ட தலைவர்கள் பலரின் வாரிசுகள் பலரும் தீவிர அரசியலில் பதவி வகிக்கிறார்கள்.

Trump's family in new US government

தற்போது டொனால்ட் ட்ரம்ப் இன்னும் அதிபராக பதவி கூட ஏற்க வில்லை. ஆட்சி மாற்றக் குழு அமைத்து அதிகாரத்தை மாற்றும் பணிதான் நடந்து கொண்டிருக்கிறது. ட்ரம்ப் அமைச்சரவையில் பங்கேற்கப்போகும் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த தேர்வில், ட்ரம்பின் மருமகன் குஷ்னர்தான் முடிவுகள் எடுப்பதாக தகவல்கள் வெளி வருகிறது. ட்ரம்பின் ஆரம்பகால விசுவாசி நியூஜெர்ஸி கவர்னர் க்ரிஸ் க்ரிஸ்டியின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு, குஷ்னருக்கு வேண்டியவர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Trump's family in new US government

யூதர் குடும்பத்தைச் சார்ந்த பில்லியனர் குஷ்னரின் தந்தையை வரி ஏய்ப்பு குற்றத்திற்காக யு.எஸ் அட்டார்னியாக இருந்த க்ரிஸ் க்ரிஸ்டி வழக்கு பதிவு செய்து விட்டாராம். அந்த விரோதத்தை தற்போது க்ரிஸ் க்ரிஸ்டியின் ஆதரவாளர்கள் மீது காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. க்ரிஸ் க்ரிஸ்டிக்கு அமைச்சரவில் முக்கிய பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் தளர்ந்துள்ளது.

ட்ரம்பின் மருமகனுக்கு வெள்ளை மாளிகையில் பதவி கிடைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

தேர்தலின் போதே மருமகன் கட்டுப்பாட்டில்தான் ட்ரம்ப் இருந்தார் (ஒன் இந்தியாவிலும் செய்தி வெளியிட்டு இருந்தோம்). ஆட்சியைப் பிடித்த பின் மருமகன் மீது ட்ரம்புக்கு கூடுதல் மரியாதை ஏற்பட்டுள்ளது. பதவியேற்புக்கு முன்னரே இப்படி என்றால், ஆட்சியில் எப்படி இருக்குமோ?

அரசியல்வாதி சாயமே இல்லாமல் வந்த டொனால்ட் ட்ரம்ப் குடும்ப அரசியல் விசயத்தில் மற்ற அரசியல்வாதிகளை மிஞ்சிவிட்டார் என்றே கூறலாம்.

English summary
President Elect Donlad Trump’s son in law Jared Kushner is influencing the transition team and nominating the people of his choice. It is expected that Kushner may also get an important position in white house. Family politics has reached a new heights in United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X