புலியை துரத்தி துரத்தி சாய்த்த டிரம்ப்? 3 வீடியோக்களையும் பார்த்து கொதித்த மக்கள்.. என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் புலி தாக்கி உயிரிழந்த 23 வயது இளைஞரின் வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சோஷியல் மீடியாவில் பகிர்ந்தது பெரும் சர்ச்சையாகியுள்ளது.. டிரம்ப் புலியுடன் சண்டையிட்டு, பிறகு அதைக் கட்டிப்பிடிப்பது போன்ற ஏஐ வீடியோ வெளியானதும் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. என்ன நடந்தது இங்கிலாந்தில்?

இங்கிலாந்தின் தெற்கு யார்க்ஷயர் பகுதியில், டான்காஸ்டர் அருகே யார்க்ஷயர் வனவிலங்கு பூங்கா உள்ளது.. கடந்த அக்டோபர் 10-ம் தேதி, வில்லியம் சாப்மேன் என்ற 23 வயது இளைஞர் இந்த பூங்காவுக்கு வந்துள்ளார்.. யாரும் துணையில்லாமல் தனியாகவே வந்தாராம்.

Trump Tiger Video

இங்கிலாந்து புலி

அப்போது, புலிகள் அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் சென்றபோது, அங்கிருந்த அல்டாய் (Altai) என்ற அமுர் புலி இளைஞரை பாய்ந்து தாக்கியிருக்கிறது.. இதில் பலத்த காயமடைந்த வில்லியம், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்..

ஆனால், தாக்குதலுக்கு முன்பு, வில்லியம் அந்த புலியை வீடியோ எடுத்திருக்கிறார்.. 41 விநாடி ஓடும் அந்த வீடியோவில், மரத்தாலான மேடையில் புலி படுத்திருப்பது தெரிகிறது.. கேமராவுக்கு சில மீட்டர் தூரத்தில் புலி இருக்கிறது.. வீடியோ எடுப்பவரின் மூச்சுவிடும் வீடியோவில் சத்தமும் கேட்கிறது.. தூரத்திலிருந்து இதை பார்த்தவர்கள், "ஓ மை காட்", "சீரியஸ்லி" என்று பதற்றத்துடன் குரல் கொடுப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.. இந்த வீடியோ உடனடியாக டெலிட் செய்யப்பட்டது. ஆனாலும், அதற்குள் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ளது.

டிரம்ப் ஷேர் செய்த வீடியோ

இந்த 41 விநாடி வீடியோவை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) பக்கத்தில் அக்டோபர் 13-ம் தேதி ஷேர் செய்திருக்கிறார்.. ஆனால், வில்லியம் உயிரிழக்கும் கடைசி தருணத்தை மட்டும் வீடியோவில் காட்டவில்லை.. டிரம்ப் இந்த வீடியோவை ஷேர் செய்து, "இயற்கையுடன் ஒருபோதும் விளையாடாதீர்கள்" என்றும் கேப்ஷன் பதிவிட்டிருந்தார்.

அதேபோல 2வதாக இன்னொரு வீடியோவையும் டிரம்ப் ஷேர் செய்துள்ளார்.. அதில், சிங்கங்கள் உள்ளிட்ட பெரிய பெரிய விலங்குகள் மனிதர்களைத் தாக்குவது போன்ற காட்சிகள் அடங்கியிருந்தது.. போதாக்குறைக்கு ,இந்த 2 வது வீடியோவில் BGM சத்தமெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளது.

ஏஐ வீடியோக்கள்

பிறகு 3வது வீடியோவையும் டிரம்ப் வெளியிட்டார்.. இது முழுக்க முழுக்க ஏஐ வீடியோவாகும்.. அதில், டிரம்ப் டைரக்ட்டாக புலியுடன் பாயுந்து சண்டை போடுகிறார்.. புலியை தரையில் சாய்த்து, கடைசியில் கட்டிப்பிடிப்பது போன்ற அந்த வீடியோ உள்ளது.. இதையும் ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.. அதுமட்டுமல்ல, வில்லியம் புலியை நோக்கிக் கையை நீட்டுவது போன்ற சைகையை, டிரம்ப்பும் செய்வதுபோல் காட்சிகள் அதில் இடம்பெற்றிருந்தன.. பின்னணியில் The Lion Sleeps Tonight என்ற பாட்டு சத்தமும் ஒலிக்கிறது.

மொத்தம் 3 வீடியோக்களை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.. வெள்ளை மாளிகையின் Rapid Response 47 என்ற கணக்கும் இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டது..

கொந்தளித்த இணையம்

இதையெல்லாம் பார்த்து நெட்டிசன்கள் கொந்தளித்து விட்டார்கள்.. "உங்களுக்கு நான் வாக்களித்தேன்.. ஆனால், இதற்காக அல்ல.. இதெல்லாம் அருவருப்பான செயல், உயிரிழந்தவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மரியாதை இல்லாத செயல்" என்றெல்லாம் விமர்சித்து வருகிறார்கள்.

வில்லியமின் குடும்பத்தினரும் இந்த வீடியோவை பார்த்து அதிருப்தி அடைந்து விட்டனர்.. மகனை இழந்த துயரிலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து கொண்டிருக்கிறோம்.. இந்த நேரத்தில் தாக்குதல் தொடர்பான வீடியோக்களை ஷேர் செய்வது எங்களுக்கு மேலும் மனவேதனையை ஏற்படுத்துகிறது.. இதையெல்லாம் பகிர்வதை உடனே நிறுத்துங்கள்" என்று அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டுள்ளனர்..

அதுமட்டுமல்ல அவர்கள் வில்லியம் பற்றி சொல்லும்போது, "வில்லியம் பொறுத்தவரை புத்திசாலியான, அன்பான நபர்.. பல வருடங்களாகக் கடுமையான மனநலப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார்..அதற்காக ஸ்ட்ராங் மருந்துகள் சாப்பிட்டு வந்தார்.. ஆனால் ஏன் புலி அடைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் சென்றார்? என்று தெரியவில்லை.. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையாக விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+