சிரியாவின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்.. மிஷன் சக்சஸ் என சந்தோசமாக டிவிட் செய்த டிரம்ப்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டமாஸ்கஸ்: சிரியாவின் அரசு படைகள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தோசமாக டிவிட் செய்துள்ளார்.

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.

சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இதுவரை 1200 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இந்த போர் இடையில் சில நாட்களாக நிறுத்தப்பட்டு இருந்தது.

தாக்குதல் நடத்தியது

தாக்குதல் நடத்தியது

ஒரு வாரம் முன்பு சிரியா ராணுவத்தின் தைப்பூர் விமான படைத்தளத்தில் அமெரிக்க படை தாக்குதல் நடத்தி இருக்கிறது. அமெரிக்க விமான படையின் போர் விமானங்கள் இங்கு ராக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 100க்கும் அதிகமான் ராணுவ வீரர்கள் மரணம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏன் தாக்குதல்

ஏன் தாக்குதல்

சிரியா ராணுவம் கெமிக்கல் குண்டுகளை பயன்படுத்தி இருக்கிறது. இது தடை செய்யப்பட்ட குண்டுகள் ஆகும். இதற்கு எதிராகவே அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து கூட்டுப்படை இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் அமெரிக்க முதலில் இந்த தாக்குதலை நாங்கள் செய்யவில்லை என்று கூறியது.

மீண்டும்

மீண்டும்

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவும், சனிக்கிழமை அதிகாலையும் அமெரிக்க மீண்டும் தாக்குதல் நடத்தியது. சிரியா அரசு ராணுவப்படைகள் இருக்கும் பகுதிகளில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. அவர்களின் கெமிக்கல் குண்டுகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதில் பிரான்ஸ், இங்கிலாந்து விமான படையும் அமெரிக்காவிற்கு உதவியுள்ளது.

வெளிப்படையாக பேசினார்கள்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ''நேற்று இரவும் மிகவும் சரியாக திட்டமிட்டு தாக்கி உள்ளனர். சிறந்த ராணுவ பலம் கொண்டு இருக்கும் பிரான்ஸ் மற்றும் யூகேவிற்கு நன்றி. இதைவிட சிறப்பான முடிவுகளை பெற முடியாது. திட்டம் நிறையவேற்றப்பட்டுவிட்டது'' என்று டிவிட் செய்துள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
War in Syria kills 1200 people in just one month days. The war is going on between Syria government army and Anti goverment forces. Syria army leads the with the help of Russia. America force attacks Syria military airbase, kills more than 100. Trump tweets ''A perfectly executed strike last night. Thank you to France and the United Kingdom for their wisdom and the power of their fine Military. Could not have had a better result. Mission Accomplished!'' in twitter.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற