For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெனால்ட் டிரம்ப் வெற்றி.... அடிவாங்கிய பங்குச்சந்தைகள் - சரிந்த டாலர் மதிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளால் உலக பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. அமெரிக்க பங்குச்சந்தையான வால் ஸ்டீரிட் பலத்த அடிவாங்கியது. டாலர் மதிப்பும் சரிவை சந்தித்தது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

வாஷிங்டன் டிசி: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றது அந்த கட்சி வேட்பாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும், சர்வதேச அளவில் பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தன. டொனால்டு டிரம்பின் வெற்றி அமெரிக்க பங்குச்சந்தையை மட்டுமின்றி சர்வதேச முதலீட்டாளர்களையும் பெரிதும் பாதித்துள்ளது.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிண்டன்தான் வெற்றி பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் பலரது எதிர்பார்ப்பையும் பொய்யாக்கும் வகையில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிபராக வெற்றி பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். டொனால்ட் வெற்றியால் டாலர் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

Trump Wins US Election:Global Markets In Free Fall and Dollar Sinks

மெக்சிகோ நாட்டின் நாணய மதிப்பு கடந்த 1994ம் ஆண்டிற்கு பிறகு பெருத்த சரிவை கண்டுள்ளது. மேலும், தங்கத்தின் மதிப்பு சுமார் 4.5 சதவிகிதம் வரை அதிகரித்து காணப்படுகிறது. ஜப்பான் நாட்டின் நாணய மதிப்பு டாலருக்கு எதிராக 3 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் மதிப்பு ஒரு பேரலுக்கு 44 டாலர் என்ற மதிப்பில் 4 சதவிகிதம் வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளால் உலக பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. அமெரிக்க பங்குச்சந்தையான வால் ஸ்டீரிட் பலத்த அடிவாங்கியது. டாலர் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை பொறுத்தவரை கடந்த ஆகஸ்ட் 2011ம் ஆண்டிற்கு அடுத்ததாக அந்நாட்டு பங்குச்சந்தை 5.5 சதவிகிதம் சரிந்துள்ளது.ஆசியாவில் உள்ள ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் உள்ள முக்கிய நிறுவனங்களின் பங்குச்சந்தை மதிப்புகள் அதிரடியாக சரிந்துள்ளன. இதனால் உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரி தோல்வியடைந்த காரணத்தினாலும், இந்தியாவில் ரூ.500, 1000 நோட்டுக்களுக்கு அதிரடியாக வாபஸ் பெறப்பட்டதாலும் இந்திய பங்குச்சந்தைகள் கடுமையாக வீழச்சியடைந்தன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1600 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 8100 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தன. தங்கம் விலை இன்று காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.1,456 அதிகரித்தது.

English summary
Trump victory could cause economic and global uncertainty, they fled risky assets such as stocks. S&P 500 index futures fell over 3 per cent after falling as much as 5 per cent earlier.The scale of the scare was clear in the Mexican peso, which plunged more than 10 per cent against the dollar in the biggest daily move in two decades.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X