For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரஸ்ஸல்ஸை உலுக்கிய தொடர் குண்டுவெடிப்புகள்: பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு

By Siva
Google Oneindia Tamil News

பிரஸ்ஸல்ஸ்: பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஜாவென்டம் விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மேலும் மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது. இந்த சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

ஜாவென்டம் விமான நிலையத்தில் இன்று காலை 8 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதனால் விமான நிலைய கட்டிடங்கள் குலுங்கியதுடன் கண்ணாடிகள் நொறுங்கின.

இந்த சம்பவத்தில் 11 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. குண்டுகள் வெடித்ததும் பயணிகள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். குண்டுகள் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் செக் இன் மையத்தை குறி வைத்து நடந்ததாக நம்பப்படுகிறது.

விமான நிலையத்தில் குண்டுகள் வெடித்ததை அடுத்து மத்திய பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய யூனியன் தலைமையகம் அருகே உள்ள மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது. குண்டுவெடிப்பால் மெட்ரோ நிலையம் புகைமூட்டமாக காணப்பட்டது. மெட்ரோ குண்டுவெடிப்பில் 10 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.

பாரீஸ் தீவிரவாத தாக்குதல் வழக்கின் குற்றவாளியான சாலா அப்துஸ்ஸலாம் கடந்த வாரம் ப்ருசெல்ஸில் வைத்து கைது செய்யப்பட்டார். இதையடுத்து நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் மக்கள் உஷாராக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதல் அப்துஸ்ஸலாமின் கைதுக்கு பழி வாங்க நடந்திருக்கும் என்று கூறப்படுகிறது. பிரஸ்ஸல்ஸில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்துள்ளதையடுத்து ஐரோப்பிய யூனியன் நகரங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் பிரஸ்ஸல்ஸில் உள்ள இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை. அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று இந்திய வெளியுறவு துறை செயலாளர் விகாஷ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.

புகைப்படங்கள்:

பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்தில் தாக்குதல் நடத்திய 2 தற்கொலைப்படை தீவிரவாதிகளின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். அவர்கள் நஜிம் லாச்ராவுய் மற்றும் முகமது அப்ரினி என்பது தெரிய வந்துள்ளது. அந்த இருவருக்கும் பாரீஸ் தாக்குதலுடன் தொடர்பு உள்ளது என்று கூறப்படுகிறது. தற்போது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

English summary
Twin explosions rocked Brussels airport on tuesday morning. Several passengers got injured in this incident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X