தமிழகத்தில் கிடைத்த பிரமாண்ட வெற்றி.. துபாய் அமீரக திமுக சார்பில் வெற்றி விழா
துபாய்: தமிழகத்தில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு துபாயில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
கடந்த 25.05.19 சனிகிழமை அமீரக திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல் வெற்றி விழா கொண்டாட்டம் தேரா பகுதியில் உள்ள லேண்ட்மார்க் ரிக்கா ஹோட்டலில் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அமீரக திமுக தலைவர் அரிகேசவநல்லூர் எஸ்.எஸ்.மீரான் தலைமையில் நடைப்பெற்ற விழாவை அமீரக திமுக துணை தலைவர் சிம்ம பாரதி வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசிய, ஃபுஜைரா தொழில் அதிபர் ராஷீத் அல் அத்தார் தமிழகத்தில் பிரமாண்ட வெற்றியை சாத்தியமாக்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், திமுக தொண்டர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பேசிய, அமீரக திமுக தலைவர் எஸ்.எஸ் மீரான் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த மகத்தான வெற்றியை தமிழக மக்களுக்கு அளித்த திமுக தலைவரை ஆட்சி கட்டிலில் அமர்த்தும் வரை நம்முடைய பணி தொடர்ந்து கொண்டிருக்கும் எனவும்,

உழைப்பு என்பதற்கு அடையாளமாக திகழும் கழக தலைவருக்கு பக்கபலமாக இருந்து அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

அதனை தொடர்ந்து அமிரக திமுக துணை தலைவர் பிளாக் துளிப் செந்தில், ஊடக துறை செயலாளர் ஏஜிஎம் பைரோஸ் கான் பேசும்போது வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு வித்திட்ட திமுகவினருக்கும், கூட்டணி கட்சி நண்பர்களுக்கும் வாழ்த்தினை தெரிவித்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியை சார்ந்த சம்சுதீன், ஆயங்குடி அப்துல் மாலிக், காயிதே மில்லத் பேரவை ஹமீதுர் ரஹ்மான், மதிமுக வில்லிசேரி பாலமுருகன்,விசிகவை சேர்ந்த முத்தமிழ் வளவன்,ராஜு,ஆயப்பாடி முஜிப், எழுத்தாளர் ஆசிஃப் மீரான், சமூக ஆர்வளர் பிலால் அலியார்,உதயநிதி ஸ்டாலின் நற்பணிமன்ற ஜெசி விக்டர், தமிழ் மக்கள் மன்றம் ஃபிர்தெளஸ் பாஷா, கீழக்கரை ஜமீல் தமிழ் ஆர்வளர் பிரபு, ஃபா குரூப் ஹஷினா மற்றும் மனித நேய மக்கள் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

மிகவும் குறுகிய நேரத்தில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமீரக திமுக நிர்வாகிகளை விழாவிற்கு வந்திருந்தவர்கள் பாராட்டினர். நிகழ்ச்சியில் திமுக உடன் பிறப்புகளும், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் ஏராளமாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications