கன்பார்ம் இல்ல ஆனா யூகமா சொல்லலாம்..ரஷ்யாவில் தாக்குதல் நடத்தியது உண்மையா?குழப்பும் உக்ரைன் அமைச்சர்
கீவ் : ரஷ்ய நகரமான பெல்கோரோடில் உள்ள எரிபொருள் கிடங்கில் உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுவதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியவில்லை என உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியுள்ளது தாக்குதல் குறித்த தகவலில் குழப்பத்தை அதிகரித்துள்ளது.
ரஷ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது, உக்ரைனின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக அப்பகுதி பிராந்திய ஆளுநர் கூறி உள்ளார்.
ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கியது உக்ரைன் தான் என ரஷ்ய ஊடகத்திலும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை உக்ரைன் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

உக்ரைன் தாக்குதல்
ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் ஹெலிகாப்டர் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்திய நிலையில், உக்ரைனின் தாக்குதல் பேச்சுவார்த்தைக்கு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக இருக்கும் என ரஷ்யா விமர்சனம் செய்துள்ளது. மேலும் உக்ரைனிம் இந்த நடவடிக்கையால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடும் கோபமடைந்துள்ளதாகவும், உக்ரைன் நாட்டின் மீதான் தாக்குதலை தீவிரப்படுத்த அந்நாட்டு ராணுவத்தினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

நேரடி புகார்
உக்ரைன் விவகாரத்தில் நடுநிலைமை வகிப்பதால் ரஷ்யா இந்தியாவை பாராட்டியுள்ள நிலையில், உக்ரைன் போரை அமெரிக்கா தூண்டுவதாக சீனா நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. மேலும், சோவியத் யூனியன் வீழ்ச்சிக்குப் பிறகு நேட்டோ கூட்டமைப்பு கலைக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. மேலும், தற்போது நடைபெற்று வரும் மோதலில் எந்த ஒரு பக்கமும் சாயவில்லை என்று தெரிவித்துள்ள சீனா, ரஷ்யாவுடனான உறவு வரம்புகள் அற்றது என்றும் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில்

உக்ரைன் அமைச்சர்
ரஷ்ய நகரமான பெல்கோரோடில் உள்ள எரிபொருள் கிடங்கில் உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுவதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியவில்லை என உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி, "ரஷ்ய நகரமான பெல்கோரோடில் உள்ள எரிபொருள் கிடங்கில் உக்ரைன் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக கூறப்படுவதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியவில்லை, ஏனெனில் நான் அனைத்து இராணுவ தகவல்களையும் அறிந்திருக்கவில்லை." என டிமிட்ரோ குலேபா கூறியுள்ளார்.
Recommended Video

டிமிட்ரோ குலேபா விளக்கம்
போலந்தில் நடந்த மாநாட்டில் தாக்குதல் பற்றிய கேள்விக்கு பதிலளித்த குலேபா "எல்லா இராணுவத் தகவல்களும் என்னிடம் இல்லாததால் உக்ரைன் இதில் ஈடுபட்டுள்ளது என்ற கூற்றை என்னால் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது.துருக்கியில் அமைதிப் பேச்சு வார்த்தையில் முன்வைக்கப்பட்ட எங்கள் திட்டங்களுக்கு ரஷ்யாவின் முறையான பதிலுக்காக உக்ரைன் காத்திருப்பதாகவும், பேச்சுவார்த்தைகளில் சமரசம் செய்ய வெளிநாட்டு சக்திகள் உக்ரைனுக்கு அழுத்தம் தரவில்லை" என்றும் அவர் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications