For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாட்டை விட்டு தப்பிச்சுடுங்க! உக்ரைன் அதிபருக்கு போன அமெரிக்க மெசேஜ்.. பதிலாக வந்த உருக்கமான ரிப்ளே!

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் நாட்டை விட்டு அந்நாட்டு அதிபர் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைத்து உள்ளதாம். அமெரிக்காவின் இந்த கோரிக்கைக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமர் செலென்ஸ்கி கூறிய பதில் மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Recommended Video

    Advice வேண்டாம், ஆயுதங்கள் கொடுங்க US-க்கு Volodymyr Zelensky பதிலடி | Oneindia Tamil

    ஆப்கானிஸ்தானை கடந்த வருடம் தாலிபான் படைகள் பிடித்தது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய நிலையில் அங்கு தாலிபான் படைகள் மீண்டும் ஆட்சியை பிடித்தது. காபூல் எல்லைக்குள் தாலிபான் படைகள் நெருங்கிய நிலையில் அப்போதைய ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினார்.

    அதிலும் ஹெலிகாப்டர், தங்கம், பணம் என்று பல கோடிகளோடு அஷ்ரப் காணி காபூலை விட்டு வெளியேறினார். இப்போது உக்ரைன் அதிபரையும் அதேபோல் வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைத்து வருகிறதாம்.

    போர் இல்லை என எத்தனை முறை சொன்னீர்கள் நினைவிருக்கிறதா? ஐநா கவுன்சிலில் ரஷ்யாவை வெளுத்த உக்ரைன் போர் இல்லை என எத்தனை முறை சொன்னீர்கள் நினைவிருக்கிறதா? ஐநா கவுன்சிலில் ரஷ்யாவை வெளுத்த உக்ரைன்

    கோரிக்கை

    கோரிக்கை

    உக்ரைன் எல்லைக்குள் ரஷ்ய படைகள் நுழைந்துவிட்டது. உக்ரைன் தலைநகர் கீவ் எல்லைக்குள் ரஷ்யா நுழைந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக இங்கு ரஷ்யா தாக்கி வருகிறது. ஏற்கனவே செர்னோபிள் பகுதியை ரஷ்யா கைப்பற்றிவிட்டது. இதனால் அங்கிருந்து எளிதாக ரஷ்ய படைகள் உக்ரைனுக்கு செல்ல முடியும். இதனால் இன்னும் சில நாட்களில் உக்ரைன் படைகளை வீழ்த்தி கீவ் பகுதியை ரஷ்ய படைகள் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

     அதிபருக்கு ஆபத்து

    அதிபருக்கு ஆபத்து

    உக்ரைன் தலைநகர் ரஷ்யாவிடம் வீழ்ச்சி அடைந்தால் அது பெரிய பரபரப்பை ஏற்படுத்தும். பெரும்பாலும் உக்ரைன் ரஷ்யாவின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். ஒருவேளை இப்படி நடந்தால் ரஷ்ய படைகள் தாக்குதலின் போதே உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியை கொலை செய்ய வாய்ப்புகள் உள்ளன. ஏன் சொந்த நாட்டு இராணுவமே சமயத்தில் செலென்ஸ்கியை கொலை செய்து ரஷ்யாவிற்கு ஆதரவாக திரும்பும் வாய்ப்புகள் உள்ளன.

    வெளியேறுங்கள்

    வெளியேறுங்கள்

    இதனால் உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியை உக்ரைனை விட்டு வெளியேறும்படி அமெரிக்கா கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. உக்ரைனை விட்டு உடனே வெளியேறுங்கள், சிறப்பு விமானம் ஏற்பாடு செய்கிறோம். நீங்கள் தப்பித்து விடுங்கள் என்று அமெரிக்கா கூறி உள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை செலென்ஸ்கி ஏற்க மறுத்துவிட்டார். நான் நாட்டை விட்டு வெளியேற மாட்டேன் என்று அவர் அமெரிக்கா பாதுகாப்பு துறை அனுப்பிய மெசேஜுக்கு பதில் அளித்துள்ளார்.

    ஆயுதம்

    ஆயுதம்

    எங்களுக்கு தேவை ஆயுதம்தான். விமான டிக்கெட் இல்லை. நான் வர மாட்டேன் என்று கூறி இருக்கிறார். செலென்ஸ்கி இன்னொரு பக்கம் மக்கள் முன் பேசிய போது, ரஷ்யா வசம் உக்ரைனின் எந்த பெரிய பகுதியும் இல்லை. உக்ரைன் படைகள் நாடு முழுக்க குவிக்கப்பட்டு உள்ளது. நாங்கள் மக்களோடு இருக்கிறோம். நாங்கள் எங்கும் செல்லவில்லை. படைகள், அரசியல் தலைவர்கள் எல்லோரும் களத்தில் இருக்கிறோம். நாங்கள் எங்கள் நாட்டை காப்பாற்றுவோம்.

    அச்சமில்லை

    அச்சமில்லை

    நமக்கு இந்த போர் தேவை இல்லை. வெறும் 2600 கிலோ மீட்டர் தூரம் நம்மை பிரிக்கிறது. இந்த போர் அவசியம் இல்லாதது. ஆனால் நீங்கள் திருப்பி தாக்கினால் நாங்களும் தாக்குவோம். அதற்கு பெயர் போர் அல்ல. தற்காப்பு. நாங்கள் எங்களை தற்காப்போம் என்பதை மறக்க வேண்டாம். நீங்கள் ஆயுதங்களோடு வந்தால் நீங்கள் எங்கள் முகத்தை மட்டுமே பார்ப்பீர்கள்.. முதுகை பார்க்க மாட்டீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    தனிமை

    தனிமை

    நாங்கள் தனித்து விடப்பட்டு இருக்கிறோம். எங்களுக்கு வெறும் வார்த்தைகள் மூலம் அனுதாபம் தரும் நாடுகளை விட உண்மையாக உதவி செய்யும் நாடுகளுக்கு நன்றி. நாங்கள் தனியாக இருக்கிறோம். ஆனால் ரஷ்யாவால் எங்களின் எதிர்காலத்தை, எங்களின் குழந்தைகளை, எங்களின் உயிரை எடுக்க முடியாது. அதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று அதிபர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார் .

    English summary
    Ukraine president Volodymyr Zelensky refuses to leave the country after the request from USA
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X