For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கெமிக்கல் ஆயுதங்கள்!" பகீர் கிளப்பும் ஜெலன்ஸ்கி.. ஆமோதிக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன? பரபர தகவல்

Google Oneindia Tamil News

கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவம் தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த பிப். இறுதியில் உக்ரைன் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நகரின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வந்தது.

இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே முதலில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேநேரம் கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

இனிமேதான் கவனமா இருக்கனும்! உக்ரைன் மக்களை எச்சரிக்கும் ஜெலன்ஸ்கி! வீரத்தில் பெரிய நாடு என பெருமிதம் இனிமேதான் கவனமா இருக்கனும்! உக்ரைன் மக்களை எச்சரிக்கும் ஜெலன்ஸ்கி! வீரத்தில் பெரிய நாடு என பெருமிதம்

 உக்ரைன் போர்

உக்ரைன் போர்

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ரஷ்யாவின் இத்திட்டத்தைத் தடுக்க மேற்குலக நாடுகள் மேலும் கடுமையான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதிக்க வேண்டும் என்றும் அவர் மேற்குலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகத் தகவல் வெளியான நிலையில் ஜெலன்ஸ்கி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

 ஜெலன்ஸ்கி

ஜெலன்ஸ்கி

இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேசுகையில், "உலக நாடுகளுக்கு நான் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். ரஷ்ய ராணுவம் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஆபத்து உள்ளது. இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த இக்கட்டான நேரத்தில் ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக மிகக் கடுமையான மற்றும் வேகமாக எதிர்வினையை ஆற்ற வேண்டியது அவசியம்" என்றார். அதேநேரம் என்ன மாதிரியான கெமிக்கல் ஆயுதங்கள் என்பது குறித்து உக்ரைன் அதிபர் விவரிக்கவில்லை.

 மரியுபோல்

மரியுபோல்

உக்ரைன் நாட்டின் முக்கிய துறைமுக நகரான மரியுபோல் நகரைப் பிடிக்க ரஷ்யா கடுமையாக முயன்று வருகிறது. இதனிடையே அங்கு ரசாயனத் தாக்குதல் நடந்துள்ளதாகத் தகவல் வெளியானது. இருப்பினும், இதை உறுதி செய்ய முடியவில்லை என்று மரியுபோல் நகர மேயரின் உதவியாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். அதேபோல மரியுபோல் நகரில் கெமிக்கல் ஆயுத தாக்குதல் தொடர்பான செய்திகளை உறுதி செய்ய முடியவில்லை என்றே பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்கா

உக்ரைன் நாட்டில் இருக்கும் நிலைமை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்று தெரிவித்த பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இந்த நேரத்தில் கெமிக்கல் தாக்குதல் தகவலை உறுதி செய்ய முடியவில்லை என்றார். இந்தத் தகவல்கள் உண்மையாக இருந்தால் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை பெரும் கவலை ஏற்படுத்துவதாக உள்ளதாக ஜான் கிர்பி தெரிவித்தார். மேலும், ரஷ்யாவின் இரசாயனம் தாக்குதலில் இருந்து தப்ப அமெரிக்கா தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகிறது.

Recommended Video

    Russia VS Ukraine | Modi Biden Meeting-ல் பேசிக்கொண்டது இது தான் | Oneindia Tamil
     எண்ணெய் தடை

    எண்ணெய் தடை

    ரஷ்யா மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்துப் பேசிய ஜெலன்ஸ்கி, "ரஷ்யாவின் பேரழிவு ஆயுதங்கள் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது ரஷ்யாவிற்கு எதிரான எண்ணெய் தடை அவசியம். அவர்களின் எண்ணெய் வர்த்தகத்திற்குத் தடை விதிக்காமல், இருந்து மற்ற பொருளாதாரத் தடைகள் எதுவுமே அவர்களைப் பெரியளவில் பாதிக்காது" என்றார்.

    English summary
    Ukrainian President Volodymyr Zelenskyy warned that Russia could use chemical weapons: (ரஷ்யாவின் கெமிக்கல் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி) Ukraine warns about Russia's chemical attack.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X