Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணுமின் நிலையங்களை குறி வைக்கும் உக்ரைன்.. திடீர் ட்ரோன் தாக்குதலால் பதற்றம்! ஐநா எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கு நேட்டோவை விரிவுபடுத்தும் முயற்சியாக உக்ரைனை, அமெரிக்கா நேட்டோவில் இணைக்க முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா பல முறை உக்ரைனை எச்சரித்தது. இருப்பினும் உக்ரைன் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இதுவே போருக்கான தொடக்கப்புள்ளி.. இப்படி தொடங்கிய போர் ஓராண்டு கடந்த பின்னரும் நீடித்து வருகிறது. இந்நிலையில், தற்போது ரஷ்யாவில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதலை நடத்தியிருப்பது பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ukraine s attack on Zaporizhia nuclear power plant in Russia Europe s largest nuclear power plant

ஐரோப்பாவின் இந்த மிகப் பெரிய அணுமின் நிலையம் தொடக்கத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு போர் தொடங்கியபோது, ரஷ்ய ராணுவம் இதனை கைப்பற்றியது. உக்ரைனால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், இந்த அணுமின் நிலையத்திலிருந்துதான் கணிசமான அளவு மின்சாரம் உக்ரைனின் கிழக்கு பகுதிகளுக்கு கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால், ரஷ்யா இதை கைப்பற்றிய பின்னர் இந்த பகுதிகளுக்கான மின்சாரம் தடைப்பட்டது.


எனவே, நீண்ட நாட்கள் குறி வைத்திருந்து தற்போது ட்ரோன்கள் மூலம் உக்ரைன் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். ரஷ்யா ட்ரோன் தாக்குதலுக்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுத்ததால், உடனடியாக பெரும் அசம்பாவிதம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. இல்லையெனில் அணு கதிர்வீச்சு ஏற்படும் நிலைமை உருவாகி இருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஐநா அதிகாரிகளும் இந்த தாக்குதலை கண்டித்திருக்கின்றனர்.

ஆனால் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மறுப்பு தெரிவித்திருக்கிறது. உக்ரைனின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் கொடுத்த விளக்கத்தில், “இந்த தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ரஷ்யாவே இப்படியான தாக்குதலை நடத்திவிட்டு பழியை எங்கள் மீது போடுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த தாக்குதல்கள் அரை மணி நேர இடைவெளியில் நடந்திருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முதல் தாக்குதல் கேன்டீன் பகுதியிலும், இரண்டாவது தாக்குதல் அணுமின் உலை இயங்க தேவையான சரக்குகளை வைக்கும் பகுதியிலும், மூன்றாவது தாக்குதல் கட்டிடத்தின் மேற் பகுதியிலும் நடந்ததாக கூறியுள்ளனர். மேலும், உக்ரைனின் தாக்குதலுக்கு பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகவும், அமெரிக்காவின் ஆயுத உதவியால்தான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் ரஷ்யா பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறது. இதற்கு அமெரிக்கா தரப்பிலிருந்து விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+