"புடின் இந்த நூற்றாண்டின் ஹிட்லர்”இத செய்யலைனா மூன்றாம் உலகபோர் கன்பாஃர்ம்..உக்கிரமான உக்ரைன் எம்பி
கீவ் : உக்ரைன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நாஜி தலைவர் அடால்ஃப் ஹிட்லர் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கன்னங்களை தொட்டு ஆசீர்வதிப்பதைக் போல ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து ரஷ்யா வியாழன் அன்று உக்ரைன் மீது தரை, வான் மற்றும் கடல் என மும்முனைகளில் தனது படையெடுப்பைத் தொடங்கியது.
தலைநகர் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு காரணமாக சுமார் 100,000 பேர் நகரங்களை விட்டு ஓடிவிட்டனர்.

2ஆம் நாள் தாக்குதல்
உக்ரைன் மீதான 2ம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர். தலைநகர் கீவ்வில் இருந்து கிராமங்களை நோக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் உக்ரேனிய அதிகாரிகள், ரஷ்யா கிவ்வைக் கைப்பற்றி அரசாங்கத்தைக் கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறுகின்றனர்.

மும்முனை தாக்குதல்
தரைவழி, கடல் வழி, வான் வழி என மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு வருகிறது. கட்டிடங்கள், விமான நிலையங்கள், ராணுவ தளங்கள் போன்றவை ஏவுகணைகளின் தாக்குதலில் பற்றி எரிந்து வருகின்றன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி வருகின்றனர். இரண்டாம் நாளாக போரை தொடங்கியுள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவ்வில் இருந்து கிராமங்களை நோக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் செல்கின்றனர்.

உக்ரைனின் ட்விட்டர்
போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் உக்ரைன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில் ஜெட்மனியின் முன்னாள் நாஜி தலைவர் அடால்ஃப் ஹிட்லர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் கன்னங்களைத் தொட்டு வணங்குவதைக் காட்டும் கேலிச்சித்திரத்தை வெளியிட்டுள்ளது. "புடின் இந்த நூற்றாண்டின் ஹிட்லர்" என நெட்டிசன்கள் கருத்து கூறி வரும் நிலையில் உக்ரைனின் இந்த செயல் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Recommended Video

நெருக்கடியிலும் படைப்பாற்றல்
:"நெருக்கடி மற்றும் படைப்பாற்றல் கிட்டத்தட்ட கைகோர்த்து செல்கின்றன. உலகெங்கிலும் பல நூற்றாண்டுகளாக, துயரம் ஏற்படும் போதெல்லாம், கலை செழித்தோங்குவதைக் கண்டிருக்கிறோம். அந்த வகையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் நெருக்கடி, விதிவிலக்காக இருக்க முடியாது." எனவும், ஏவுகணை மழை பொழியும் மற்றும் டாங்கிகளுடன் நாட்டிற்கு எதிராக ரஷ்யா போரை அறிவித்துள்ள போது, உக்ரைன் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த கேலிச்சித்திரம், எந்த உரையும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது என உக்ரைன் எம்.பி. ஒருவர் கூறியுள்ளார்.
-
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications