காபூலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் துப்பாக்கி முனையில் கடத்தல்: உக்ரைன் புகார்
காபூல்: உக்ரேனியர்களை அழைத்து செல்வதற்காக ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் வசம் வந்தபிறகு, காபூல் விமான நிலையம் வழியாக எப்படியாவது தங்கள் சொந்த நாட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்று பல்வேறு நாட்டவர்கள் பரிதவித்து கொண்டிருக்கிறார்கள்.
காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம், தங்கள் நாட்டினரையும், தங்களுக்கு நெருக்கமான நேச நாடுகளைச் சேர்ந்தவர்களையும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப பல விமானங்களை அனுப்பி வருகிறது.

விமானங்கள் இயக்கம்
இதேபோல் இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு பயணிகளை சொந்த நாட்டிற்கு அழைத்து செல்ல விமானங்களை இயக்கி வருகின்றன. அப்படித்தான் உக்ரைனும் விமானங்களை இயக்கி வருகிறது,

திருடிவிட்டார்கள்
இந்நிலையியில் உக்ரேனியர்களை அழைத்து செல்வதற்காக ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காபூலில் நிறுத்தப்பட்டிருந்தஅந்த விமானத்தை ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் கடத்திவிட்டதாக உக்ரைன் புகார் அளித்துள்ளது. அதாவது தங்கள் விமானத்தை யாரோ திருடிவிட்டதாக கூறி உள்ளது உக்ரைன்.

ஈரான் பயணிகள்
உக்ரைனின் துணை வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா இது பற்றி கூறும் போது, காபூலில் நிறுத்தப்பட்டிருந்த எங்கள் விமானம் ஈரானைச் சேர்ந்தவர்களால் கடத்தப்பட்டது. உக்ரேனியர்களை அழைத்துச் செல்வதற்கு பதிலாக அடையாளம் தெரியாத பயணிகளுடன் ஈரானுக்கு பறந்தது.

முடியவில்லை
உக்ரைன் (எங்கள்) நாட்டு பயணிகளை அழைத்துச்செல்வதற்காக காபூல் வந்த எங்கள் விமானத்தில் பயணிகளை ஏற்ற செல்ல முடியவில்லை. மூன்று முறை முயற்சிகள் செய்தும் எங்கள் பயணிகளை அழைத்துச்செல்ல முடியவில்லை. காரணம் என்னவென்றால் , எங்கள் நாட்டு மக்கள் விமான நிலையத்திற்குள் செல்ல முடியவில்லை. அதனால் விமானத்தை காபூல் விமான நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்தோம்

பேச்சுவார்த்தை
காபூலில் காத்திருந்த எங்கள் விமானத்தை ஆயுதம் ஏந்தியவர்கள் வேறு பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரானுக்கு பறந்துவிட்டனர். அதாவது எங்கள் விமானத்தை திருடிக்கொண்டு சென்றுவிட்டார்கள்,. திருடப்பட்ட விமானத்தை மீட்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பயணிகளை மீட்க வேறு விமானம் அனுப்புவது குறித்து திட்டமிட்டு வருகிறோம் என்றார்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications