அத்துமீறுகிறது ரஷ்யா.. பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும்.. இங்கிலாந்தில் வலியுறுத்திய ஜெலன்ஸ்கி..!

Subscribe to Oneindia Tamil

கீவ் : உக்ரைன் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு நாட்டு மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர்.

போர் காரணமாக உக்ரைன் நாட்டை விட்டு ஏராளமானோர் வெளியேறி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியானது வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உக்ரைன் மீது தாக்குதல்

உக்ரைன் மீது தாக்குதல்

தாக்குதலை நிறுத்த கோரி பல நாடுகள் கோரிக்கை விடுத்தும் ரஷ்யா அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில் ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலமுனை தாக்குதலை தொடங்கி உள்ளன. உக்ரைனின் சிறு நகரங்களைக் கைப்பற்ற தொடங்கியுள்ள நிலையில், பெரிய நகரங்களை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

பொருளாதாரம் வீழ்ச்சி

பொருளாதாரம் வீழ்ச்சி

இதனால் அந்த நாட்டின் பணமதிப்பு 30 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல அந்நாட்டின் பங்கு சந்தைகளும் 40 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டன. ஏற்கனவே கடும் விலைவாசி பிரச்சினையில் சிக்கித் தவித்து வரும் ரஷ்யாவில் பணமதிப்பு வீழ்ச்சி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது. ரஷ்ய விமானங்கள் போக்குவரத்தையும் அமெரிக்கா பிரிட்டன் கனடா போன்ற நாடுகள் தடை செய்துள்ளன.

படையெடுப்புக்கு பதிலடி

படையெடுப்புக்கு பதிலடி

இந்நிலையில் உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை தடை செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பிடன் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ரஷ்ய பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பெரிய பொருளாதாரத் தடையாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    ரஷ்யாவுக்கு அமெரிக்கா திடீர் செக்… எண்ணெய் இறக்குமதிக்கு தடை!
    பயங்கரவாத நாடு ரஷ்யா

    பயங்கரவாத நாடு ரஷ்யா

    இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய ஜெலன்ஸ்கி, ரஷியாவுக்கு எதிரான பொருளாதார தடைகளின் அழுத்தத்தை அதிகரித்து அந்நாட்டை பயங்கரவாத நாடாக அறிவிக்க வேண்டும் எனவும், உக்ரைனிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் ரஷ்ய படைகளை ஆகாயம், கடல், தரை என மூன்று வழிகளிலும் உக்ரைன் ராணுவம் எதிர்கொண்டு வருவதாக கூறிய ஜெலென்ஸ்கி, தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என அறிவித்து, உக்ரைன் வான்பரப்பு பாதுகாப்பானது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+