“ஐ ஆம் ரஷ்யன் சாரி உக்ரைன்”..மனிதநேயத்துடன் ரஷ்ய மக்கள்..காது கொடுக்காத புடின்.. எண்டே இல்லையா சார்?
கீவ் : தலைநகரிலிருந்து வெறும் இருபது மைல் தூரத்தில் வந்துள்ள ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தலைநகர் நோக்கி முன்னேறி வருகிறது எனவும், 2வது நாளாக உக்ரைன் மீதான போரை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மீண்டும் வேதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான 2ம் நாள் போரை ரஷ்யா தொடங்கியுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர்.
தலைநகர் கீவ்வில் இருந்து கிராமங்களை நோக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைனுடனான போருக்கு எதிராக ரஷ்யாவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மாஸ்கோ, செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் போராட்டத்தில் ஈடுபட்ட 600 பேர் கைது செய்யப்பட்ட நிலையி;ல், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ‛‛உக்ரைன் நமக்கு எதிரியில்லை'' என மக்கள் முழக்கமிட்டு வருகின்றனர். இருந்து 2வது நாளாக தாக்குதலை தொடங்கியுள்ள ரஷ்யா கீவ் நகரை கைப்பற்ற முயன்று வருகிறது.

உக்ரைன் ராணுவம் பதிலடி
தலைநகரிலிருந்து வெறும் இருபது மைல் தூரத்தில் வந்துள்ள ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தலைநகர் நோக்கி முன்னேறி வருகிறது. போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ ரயில்நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுக்கு எதிராக நடத்திய தாக்குதலில் 800 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் எனவும் ரஷ்யாவின் 30 டாங்கிகள், 7 விமானங்கள், 60 ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டுள்ளன என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

அதிபர் வேதனை
ரஷ்ய படைகள் என் மீது குறிவைத்து உக்ரைன் தலைநகரில் நுழைந்துள்ளது எனவும், என்னை அழித்தால் உக்ரைனை அழித்து விடலாம் என ரஷ்யா நினைக்கிறது என கூறியுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தலைநகரிலிருந்து வெறும் இருபது மைல் தூரத்தில் வந்துள்ள ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தலைநகர் நோக்கி முன்னேறி வருகிறது எனவும், 2வது நாளாக போரை உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும் என்ன நடந்தாலும் உக்ரைனை விட்டு வெளியேறப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மன்னிப்பு கேட்கும் ரஷ்யா
உக்ரைன்மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை கைவிட உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். டுவிட்டரில் #saveuukraine என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு ரஷ்ய மக்களும் மன்னிப்பு கேட்டு வருகின்றனர். ஐ அம் ரஷ்யன் சாரி உக்ரைன் என்ற பதாகையுடன் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
-
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications