கண்ணுக்கெட்டிய தூரம் வரை உதவியை காணோம்..! கண்கலங்கிய உக்ரைன் அதிபர்.. கண்டுகொள்ளாத அமெரிக்கா?

Subscribe to Oneindia Tamil

கிவ் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் பொருளாதார தடையோடு அமெரிக்கா நின்றுவிட்டது. போரில் நாங்கள் தனித்து விடப்பட்டு உள்ளோம் எங்களுடன் இணைந்து போராட தயாராக இருக்கிறார்கள். நான் இதுவரை யாரையும் பார்க்கவில்லை என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீடியோ உரையில் விரக்தியுடன் பேசியுள்ளார்.

Recommended Video

    Ukraine-ஐ கைவிட்ட USA, NATO | Biden Speech | Oneindia Tamil

    உக்ரைனில் எதிர்பார்த்தது போலவே அந்நாட்டின் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்திற்கு அதிபர் புடின் நேற்று அதிகாலை அதிரடி உத்தரவிட்டார். அவர் பேசிய சிறிது நேரத்தில் உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதலைத் தொடங்கின.

    உக்ரைன் தலைநகர் கீவ், கார்கிவ், டோனஸ்க் , மைக்கோல், மரியூபோல் மற்றும் கிழக்கு உக்ரைனின் நகரங்களில் ரஷ்ய ராணுவம் குண்டுமழை பொழிந்தது.

    மும்முனை தாக்குதல்

    மும்முனை தாக்குதல்

    தரைவழி, கடல் வழி, வான் வழி என மும்முனை தாக்குதல் நடத்தி வருகிறது. எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு வருகிறது. கட்டிடங்கள், விமான நிலையங்கள், ராணுவ தளங்கள் போன்றவை ஏவுகணைகளின் தாக்குதலில் பற்றி எரிந்து வருகின்றன. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடி வருகின்றனர். இரண்டாம் நாளாக போரை தொடங்கியுள்ளது. இந்நிலையில், தலைநகர் கீவ்வில் இருந்து கிராமங்களை நோக்கி கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் செல்கின்றனர்.

    137 பேர் உயிரிழப்பு

    137 பேர் உயிரிழப்பு

    இதனால் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கீவ் உள்ளிட்ட நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்து உள்ளனர். குண்டுவீச்சில் குடியிருப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. அதில் இருந்தவர்கள் படுகாயமடைந்து உள்ளனர். இனிமேல் நிலைமை என்னவாகுமோ என்ற அச்சத்தில் மக்கள் ஏடிஎம் மையங்களிலும், கடைகளிலும் குவிந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவுடனான முதல்நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாகவும், போரில் நாங்கள் தனித்து விடப்பட்டு உள்ளோம் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.

    உக்ரைன் அதிபர் விரக்தி

    உக்ரைன் அதிபர் விரக்தி

    எங்களுடன் இணைந்து போராட தயாராக இருக்கிறார்கள். நான் இதுவரை யாரையும் பார்க்கவில்லை என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீடியோ உரையில் விரக்தியுடன் பேசியுள்ளார். "எங்களுடன் இணைந்து போராட யார் தயாராக இருக்கிறார்கள்? நான் யாரையும் பார்க்கவில்லை. உக்ரைனுக்கு நேட்டோ உறுப்புரிமைக்கு உத்தரவாதம் அளிக்க யார் தயாராக இருக்கிறார்கள்? எல்லோரும் பயப்படுகிறார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.

    நான் ஓடவில்லை

    நான் ஓடவில்லை

    மேலும் வியாழன் அதிகாலை தாக்குதல் தொடங்கியதில் இருந்து 137 உக்ரைனியர்கள், இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 316 பேர் காயமடைந்துள்ளனர் என்றார். ரஷ்ய "நாசவேலைக் குழுக்கள்" தலைநகர் கிவ்விற்குள் நுழைந்ததாகவும், நகரத்தின் குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்குமாறும் ஜெலென்ஸ்கி கூறினார். ரஷ்யா தன்னை "இலக்கு நம்பர் ஒன்" என்று அடையாளப்படுத்திய போதிலும், அவரும் அவரது குடும்பத்தினரும் உக்ரைனில் தங்கியிருப்பதாகவும் ஜெலன்ஸ்கி கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+