For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஷ்யாவுக்கு எதிரான ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் தோல்வி.. வீட்டோவை பயன்படுத்தி முறியடிப்பு!

Google Oneindia Tamil News

ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில தீர்மானம் தோல்வி.. இந்தியா வாக்களிக்கவில்லை!

Recommended Video

    Russia-வுக்கு எதிராக ஓட்டுப்போடாத India, China | UN Security Council | Oneindia Tamil

    ஜெனீவா: உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்தது.

    நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்த நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைன தலைநகர் கீவ், கிர்காவ், ஓடேஸா உள்ளிட்ட நகரங்களில் குண்டுமழை பொழிந்து வருகிறது. இதில் அப்பாவி மக்களும் இறந்துள்ளனர்.

    இரு தரப்புகளை சேர்ந்த ராணுவ வீரர்களும் பலியாகிவிட்டனர். உக்ரைன் மீதான போரை நிறுத்துமாறு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியும் ரஷ்யா கேட்கவில்லை.

    ட்விஸ்ட்! நீங்கள் அதிகாரத்தை பிடியுங்கள்.. உக்ரைன் ராணுவத்திற்கு புதின் திடீர் அழைப்பு! அடுத்து என்னட்விஸ்ட்! நீங்கள் அதிகாரத்தை பிடியுங்கள்.. உக்ரைன் ராணுவத்திற்கு புதின் திடீர் அழைப்பு! அடுத்து என்ன

    ஐ நா பாதுகாப்பு கவுன்சில்

    ஐ நா பாதுகாப்பு கவுன்சில்

    இதையடுத்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, அல்பேனியா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நார்வே, அயர்லாந்து, அல்பேனியா, கேபான், மெக்சிக்கோ, பிரேசில், கானா, கென்யா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

    நிரந்தர உறுப்பினர்கள்

    நிரந்தர உறுப்பினர்கள்

    இந்த கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள ரஷ்யா, தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. மொத்தம் 15 நாடுகள் கொண்ட இந்த கவுன்சில் தீர்மானத்திற்கு இந்தியா, சீனா, ஐக்கிய அரபு நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை. ரஷ்யாவின் நட்பு நாடான சீனாவும் வாக்களிக்கவில்லை. இதுகுறித்து அமெரிக்க பிரதிநிதி கூறுகையில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரஷ்யா இந்த தீர்மானத்தை முறியடிக்கும் என தெரிந்தும் இந்த தீர்மானத்தை நாங்கள் ஏன் கொண்டு வந்தோம் என்றால் உலக அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை உணர்த்துவதற்காகத்தான் என அமெரிக்க பிரதிநிதி தெரிவித்தார்.

    வீட்டோ அதிகாரம்

    வீட்டோ அதிகாரம்

    வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா முறியடித்தது. வீட்டோ அதிகாரம் என்பது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் ஒரு பவர். இந்த வீட்டோ அதிகாரம், நிரந்தர உறுப்பினர்களான சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு உள்ளது.

    வீட்டோ என்றால் என்ன?

    வீட்டோ என்றால் என்ன?

    ஒரு நாட்டிற்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு பெரும்பான்மை ஆதரவு இருந்தாலும், வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மேற்கண்ட 5 நாடுகளில் ஒரு நாடு எதிர்த்து வாக்களித்தாலும் அந்த தீர்மானம் தோல்வி அடையும். இது ஐநா சட்டப் பிரிவு 27 இல் வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி 15 நாடுகளை கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் மேற்கண்ட 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. மற்ற 10 நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள் இல்லை. இந்த 15 இல் 11 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த போதிலும் அதாவது மெஜாரிட்டி இருந்த போதிலும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்திற்கு எதிராக ரஷ்யா வாக்களித்ததன் மூலம் இந்த தீர்மானம் தோல்வியடைந்தது.

    English summary
    Russia uses it veto powers to fail resolution against it in UNSC.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X