For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்க தடை

By Siva
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எஸ். எனப்படும் நரம்பு தொடர்பான நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக பிரபலங்கள் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்று தங்களின் தலையில் ஒரு பக்கெட் குளிர்ந்த நீரை ஊற்றிக் கொண்டு வருகிறார்கள். அவ்வாறு சவாலை ஏற்பவர்கள் ஏ.எல்.எஸ். அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்றுக் கொண்டு தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டார். இந்நிலையில் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்க அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

அமெரிக்க தூதரக அதிகாரிகள், வெளியுறவுத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்கக் கூடாது. அவர்கள் சவாலை ஏற்க சட்டம் அனுமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை அடுத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி மற்றும் நியூசிலாந்திலும் பலர் ஐஸ் பக்கெட் சவாலை ஏற்று வருகிறார்கள்.

English summary
US government has banned US diplomats from taking ice bucket challenge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X