For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு குண்டை வைத்திருக்க ஈரானுக்கு அனுமதி இல்லை: அமெரிக்கா, பிரான்ஸ் கறார்

By Siva
Google Oneindia Tamil News

பாரிஸ்: ஈரான் அணுகுண்டுகளை வைத்திருக்கக் கூடாது என அமெரிக்காவும், பிரான்ஸும் கூட்டாக தெரிவித்துள்ளன.

ஈரானின் அணு ஆராய்ச்சி ஆயுதம் தயாரிக்கவே நடத்தப்படுகிறது என்று அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டி அந்நாடு மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரி பிரான்ஸ் சென்றார். அங்கு அவரும், பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் பேபியஸும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்,

ஈரான் தன் உள்நாட்டு விவகாரங்களுக்காக அணு சக்தியை உருவாக்கி பயன்படுத்தலாம். ஆனால் அணு குண்டுகளை வைத்திருக்கக் கூடாது என்றனர்.

ஈரான் அணு சக்தி ஆராய்ச்சிகளை நிறுத்துவது குறித்த உடன்படிக்கையில் வரும் 24ம் தேதிக்குள் கையெழுத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது.

தாங்கள் அணு சக்தியை தயாரிப்பது உள்நாட்டு தேவைக்கு மட்டுமே என்கிறது ஈரான். ஆனால் அது ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக மேற்கத்திய நாடுகள் அஞ்சுகின்றன.

அதே நேரத்தில் இஸ்ரேல் அணு குண்டு வைத்திருக்கலாமாம்!

English summary
US and France together insist that Iran cannot have atomic bomb.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X