ஈரானை தாக்க விடமாட்டோம்! ஆதரவாக வந்த பிரிட்டன்.. சொந்த ராணுவ தளத்தை பயன்படுத்த டிரம்புக்கு அனுமதி மறுப்பு
லண்டன்: அமெரிக்காவுக்கும், ஈரானுக்குமான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஈரான் மீது தாக்குதல் நடத்த பிரிட்டனின் முக்கிய ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரியது. அதற்கு பிரிட்டன் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஈரான் ஹேப்பியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி வருகிறார்.

இதுதொடர்பாக அமெரிக்கா - ஈரான் இடையே 2 கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானை மிரட்டும் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து ஈரானை மிரட்டி வருகிறார். விரைவில் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி உள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்கா தற்போது யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் உள்பட 2 பெரிய போர்க்கப்பல்களை வைத்து ஈரானை மிரட்டி வருகிறது.
போர் விமானங்கள் குவிப்பு
இது போதாது என்று எஃப் 35, எஃப் 16 உள்பட பல போர் விமானங்களை மத்திய கிழக்கில் அமெரிக்கா குவித்து வருகிறது. இது ஈரானை பதற்றமடைய வைத்துள்ளது. இருப்பினும் ஈரானும், அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.
பிரிட்டன் ராணுவதளம்
இந்நிலையில் தான் ஈரானை தாக்கும் வகையில் பிரிட்டன் ராணுவதளத்தை பயன்படுத்த அமெரிக்கா அனுமதி கோரிய நிலையில் அது மறுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனை எடுத்து கொண்டால் இந்திய பெருங்கடலில் டியாகோ கார்சியாவில் ராணுவ தளத்தை வைத்துள்ளது.
டியாகோ கார்சியாவில் உள்ள பிரிட்டனின் ராணுவ தளம் கிழக்கு ஆப்பிரிக்க கடற்கரையில் இருந்து 3,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் ராணுவ நடவடிக்கைகளை எளிதாக்கும்.
அனுமதி மறுத்த பிரிட்டன்
இதனால் அந்த ராணுவ தளத்தை பயன்படுத்த அமெரிக்கா, பிரிட்டனிடம் அனுமதி கோரியுள்ளது. அதற்கு பிரிட்டன் அனுமதி வழங்க மறுத்துள்ளது. சர்வதேச சட்டம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அமைதியை காரணம் காட்டி பிரிட்டன் இந்த அனுமதியை கொடுக்க மறுத்துள்ளது.
இதுதொடர்பாக பிரிட்டன் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில், "அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே தற்போது ஒரு அரசியல் தீர்வுக்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு பிரிட்டன் ஆதரவு அளிக்கிறது'' என்று கூறப்படுகிறது.
டிரம்புக்கு சிக்கல்
முன்னதாக கடந்த 17 ம் தேதி டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மருடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அப்போது ஈரானை தாக்க பிரிட்டன் ராணுவ தளத்தை பயன்படுத்த டிரம்ப் அனுமதி கோரினாரா? என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இருப்பினும் அமெரிக்கா சார்பில் ஈரானை தாக்க பிரிட்டன் ராணுவ தளங்களை அனுமதி கோரப்பட்டதாகவும், அதற்று பிரிட்டன் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
-
குவைத் ஏர்போர்ட்டில் துடிதுடித்து உயிரிழந்த இந்தியர்.. ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பயங்கரம்! திக்திக் -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications