ஹலோ பிரபா ஒயின்ஷாப் ஓனரா?.. அமெரிக்க அதிபருக்கு பிராங்க் கால் செய்து கலாய்த்த நபர்!
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு காமெடியன் ஒருவர் போன் செய்து கலாய்த்துள்ளார்.
நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு காமெடியன் ஒருவர் போன் செய்து கலாய்த்துள்ளார். அதிபர் கலாய்க்கப்பட்ட ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.
அமெரிக்க அதிபருக்குத்தான் உலகிலேயே அதிக பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. பல அடுக்க பாதுகாப்பை தாண்டித்தான் அவரை சீண்ட முடியும்
ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஜான் மேலேன்டேஸ் என்ற காமெடியன் எளிதாக போன் போட்டு ''பிரபா ஒயின் ஷாப் ஓனரா'' என்பது போல, அமெரிக்க அதிபரை கலாய்த்துள்ளார். இதனால் அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

யார் இவர்
தமிழகத்தில் நிறைய ஆர்ஜேக்கள் எப்படி போன் செய்து பிரபலங்களை கலாய்க்கிறார்களோ அதேபோல் அமெரிக்காவில் ஜான் மேலேன்டேஸ் போன் செய்து கலாய்ப்பதில் வல்லவர். ''ஸ்டேட்டரிங் ஜான்'' என்ற நிகழ்ச்சியில் இவர் போன் செய்து கலாய்ப்பார். ஆனால் சாதாரண பிரபலங்களை கலாய்க்காமல் கொஞ்சம் பெரிய நபர்களை தேடிப்பிடித்து பேசுவார்.

அதிபர்
இந்த நிலையில்தான் அமெரிக்க அதிபரை கலாய்க்க நினைத்து கலிபோர்னியா செனட்டர் பாப் பேசுவதாக பொய் சொல்லி, அதிபரின் எண்ணுக்கு போன் செய்துள்ளார். முதலில், உண்மையாகவே ஜான் பேசுவதாக கூறியுள்ளார். ஆனால் வெள்ளை மாளிகையில் அதிபருடன் போன் இணைப்பை ஏற்படுத்த மறுத்ததால், இரண்டாவது முறை செனட்டர் பேசுவதாக பொய் சொல்லியுள்ளார்.
|
மீண்டும் கால் செய்தார்
இரண்டாவது முறை டிரம்ப்பின் உறவினர் ஒருவர் போனை எடுத்து பேசிவிட்டு வைத்துள்ளனர். அதன்பின் சில நிமிடங்களில் டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ போனில் இருந்து ஜானுக்கு திரும்ப கால் செய்துள்ளார். இந்த போன் கால் மொத்தம் அப்படியே ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இதை தனது நிகழ்ச்சியில் ஜான் வெளியிட்டுள்ளார்.

என்ன
டிரம்பும், செனட்டர் பாப்பும் கொஞ்சம் நெருங்கிய நண்பர்கள். கொள்கை ரீதியாக இருவரும் ஒரு மாதிரியானவர்கள். இதுகுறித்து இருவரும் பேசி இருக்கிறார்கள். ஆனால் பேசியது ஜான் என்று தெரியாமல் டிரம்ப் கடைசி வரை பேசிவிட்டு கட் செய்துள்ளார். இந்த ஆடியோ பதிவு தற்போது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications