For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க அதிபராக கடைசி உரை.. ட்ரம்பை அப்போதும் தாக்கிய ஒபாமா!

அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக சிகாகோவில் இன்று தனது இறுதி உரையாற்றினார். அப்போது பல முறை புதிய அதிபாராக பதவியேற்கவுள்ள டொனால்டு ட்ரம்பை தாக்கி பேசினார்.

Google Oneindia Tamil News

சிகாகோ: அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக சிகாகோவில் இன்று தனது இறுதி உரையாற்றினார். அப்போது ஜனநாயகம் குறித்து, புதிய அதிபாராக பதவியேற்கவுள்ள டொனால்டு ட்ரம்பை அவர் மறைமுகமாக தாக்கி பேசினார்.

பாரக் ஒபாமா கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்க அதிபராக பதவி வகித்து வருகிறார். ஒபாமாவின் அதிபர் பதவிக் காலம் வரும் 20ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

US President Obama's farewell Speech!!

இந்நிலையில் ஒபாமா அதிபராக தனது கடைசி உரையை சிகாகோவில் இன்று நிகழ்த்தினார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் ஒபாமா மேலும் 4 ஆண்டுகள் அதிபராக தொடர வேண்டும் என கோஷமிட்டனர்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த ஒபாமா, மக்கள் தன்னை ஒரு சிறந்த மனிதராக மாற்றிவிட்டதாக கூறினார். மேலும் தான் அதிபாராக பொறுப்பேற்றப்பிறகு அமெரிக்கா வலிமையானதாகவும் வளர்ச்சியடைந்ததாகவும் உள்ளது என்றார்.

US President Obama's farewell Speech!!

அதிபர் ஒபாமா தனது இறுதி உரையின் போது அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையை ஏற்முடியாது என்றார். மேலும் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு ட்ரம்பை அதிபர் ஒபாமா தாக்கி பேசினார்.

மேலும் அமெரிக்காவில் இன்னும் 10 நாட்களுக்கு ஜனநாயகம் இருக்கும் என்றும் ஒபாமா குறிப்பிட்டார். 10 நாட்களுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவியேற்கவுள்ளார்.

அதனை குறிப்பிட்டே ஒபாமா, தான் பதவியில் உள்ள வரை ஜனநாயகம் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போதே இஸ்லாமியர்களுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் பேசியுள்ளார். அதனையும் குறிவைத்தே ஒபாமா தனது உரையில் வெளிப்படுத்தியுள்ளார். தேர்தல் பிரசாரத்தின்போது கூட ட்ரம்ப்பை ஓமாபா இதே ரீதியில் தாக்கி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
US President Obama speaking in chicago. This is his last speech as a president.In this speech he attacked Donald trump many times.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X