"வறண்ட பாலைவனமாகும் பூமி?" வெள்ளி கிரகத்தில் நடந்த அதே ஆபத்து! பகீர் கிளப்பும் நாசா ஆய்வாளர்கள்!
வாஷிங்டன்: இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழும் சூழல் இருக்கும் என்பதை பல்வேறு ஆய்வாளர்கள் நம்பத் தயாராக இல்லை. பூமியைத் தாண்டி மற்ற கிரகங்களில் சூழல் எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
Recommended Video
அப்படி உலகெங்கும் தீவிர ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க் கிரகத்திலும், வீனஸ் எனப்படும் வெள்ளி கிரகத்திலும் மனிதர்கள் வாழும் சூழல் உள்ளதா என்பது குறித்த ஆய்வுகள் தீவிரமெடுத்துள்ளது.
ஆனால், இந்த இரு கிரகங்களும் நமது பூமியைப் போல இல்லை. இரண்டு கிரகங்களும் முற்றிலுமாக எரிந்து, தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இரண்டு கிரகங்களிலும் மனிதர்கள் உயிர் வாழச் சாதகமான சூழல் இல்லை.

மின்சார புலம்
நமது உலகம் இந்த அளவுக்குச் செழிப்பாக இருக்க முக்கிய காரணமாகப் புவியைச் சுற்றி இருக்கும் பலவீனமான மின்சார புலம். இந்த பலவீனமான மின்சார புலம் மற்ற கிரகங்களில் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. பூமியின் இந்த மின் புல ஆற்றலை அளவிடக் கடந்த மே 9ஆம் தேதி எண்டூரன்ஸ் பணி தொடங்கப்பட்டது. பூமியின் மின்சார புலம் நமது காற்றில் உள்ள மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட துகள்களை எவ்வளவு இழுக்கிறது என்பதை கண்டறிவது இதன் முக்கிய பணியாகும்.

நாசா ஆய்வு
இந்த மின்சார ஆற்றல் மிகவும் பலவீனமாக இருக்கும் என்பதே நாசாவின் கருத்து. இந்த மின் புல ஆற்றல் காரணமாகவே பூமியில் நீரோட்டம் இருப்பதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். நாம் ஏன் இங்கு இருக்கிறோம் என்ற மிகவும் அடிப்படையான கேள்விக்கு விடை கண்டறிய இது உதவும். வீனஸ் எனப்படும் வெள்ளி கிரகத்தைப் பூமியின் இரட்டை கிரகம் என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வீனஸ்
ஒரு காலத்தில் பூமியைப் போலவே வீனஸ் கிரகமும் நீர் நிரம்பியதாகவும், உயிர்கள் இருக்கத் தேவையான வளங்களைக் கொண்டதாகவும் இருந்து இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இருப்பினும், காலப்போக்கில், வெள்ளி கிரகம் அனைத்து நீரையும் இழந்து இன்று இருப்பது போல வறண்ட பகுதியாக மாறி உள்ளது. ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் வீனஸ் எக்ஸ்பிரஸ் மிஷன், கடந்த 2016ஆம் ஆண்டில் வெள்ளி கிரகத்தைச் சுற்றி விசித்திரமான ஒன்றைக் கவனித்தது. அதாவது வெள்ளி கிரகத்தைச் சுற்றி 10 வால்ட் மின்சார திறன் இருப்பது கண்டறியப்பட்டது. வெள்ளி அதன் ஒட்டுமொத்த நீரை இழப்பதற்கு இது காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பாசிட்டிவ் துகள்
இந்த மின்சார புலம் அதன் மேற்பரப்பில் இருக்கும் பாசிட்டிவ் துகள்களை உறிஞ்சிக் கொள்கிறது. இந்த மின்சார ஆற்றல், நீரில் இருக்கும் பாசிட்டிவ் சார்ஜ் ஆக்சிஜனை ஹைட்ரஜன் அணுக்களிலிருந்து பிரித்து எடுத்து விடுகிறது. இதுபோன்ற நடைமுறை பல ஆண்டுகளாக நடைபெற்றதாலேயே, வெள்ளி கிரகத்தில் இருந்த நீர் முழுமையாக இல்லாமல் போய் இருக்கும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டனர்.

பூமியில் நடக்குமா
வெள்ளி கிரகத்தில் கண்டறியப்பட்டுள்ள இது, பூமியின் எதிர்காலம் குறித்து கேள்விகளையும் எழுப்பியுள்ளன. பூமி ஏற்கனவே காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொண்டு வரும் நிலையில், வீனஸைச் சுற்றி இருந்த மின்சார புலம் போன்ற அமைப்பு பூமியிலும் இருப்பதை மிகவும் சீரியஸாகவே ஆய்வாளர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர். வெள்ளி கிரகத்தைப் போலவே பூமியிலும் நடக்கும் என்று ஆய்வு செய்தனர்.

ராக்கெட்
பூமியைச் சுற்றியுள்ள மின்சார புலம் வீனஸை சுற்றி இருக்கும் மின்சார புலத்தை விட கிட்டத்தட்ட 25 மடங்கு பலவீனமாக உள்ளது. இதனால் பூமியை சுற்றி இருக்கும் இந்த மின்சார புலத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடியவில்லை. எனவே, இதைக் கண்டறிய ஆர்க்டிக் பெருங்கடலில் உள்ள நார்வே பகுதியில் இருக்கும் ஸ்வால்பார்டில் இருந்து வட துருவத்திற்கு ஒரு ராக்கெட் ஏவப்படும். இந்த ராக்கெட் பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வெளியேறும் எலக்ட்ரான்களை அளவிடும்.

ஒரு பகுதி
இந்த எலக்ட்ரான் வெளியேற்றம் என்பது இது பல பில்லியன் ஆண்டுகளாக நடந்து வரும் வளிமண்டல வெளியேற்றத்தின் செயல்முறையின் ஒரு பகுதியாகும். இந்த எலக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட, யூகிக்கக்கூடிய வேகத்தில் பூமியை விட்டு வெளியேறுகின்றன. இருப்பினும், இதைப் பூமியின் மின்சார ஆற்றலால் சிறிது சிறிதாகக் குறைக்க வேண்டும். இப்போது நாம் அனுப்பும் இந்த ராக்கெட் அதன் அளவு அறிய உதவும். இதன் மூலம் வீனஸில் நடந்ததை போல இங்குப் பூமியிலும் நடக்குமா என்பதைக் கண்டறிய உதவும்
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications