எம்ஜிஆர் பைட் பாத்திருப்பீங்க.. ஏன் ஜாக்கி சான் கூட பாத்திருப்பீங்க.. இந்த சண்டையை பாருங்க மக்களே!
தாயின் கர்ப்ப பையில் இரட்டை குழந்தைகள் சண்டை போட்டு கொண்டன.
Recommended Video
பெய்ஜிங்: உங்க வீட்டு சண்டை இல்லை.. எங்க வீட்டு சண்டையும் இல்லை.. பக்கத்து வீட்டு சண்டையும் இல்லை.. பங்காளி சண்டையும் இல்லை.. அப்படி ஒரு சண்டை! உலகமே இதுவரைக்கும் பார்த்திராத ஒரு சண்டைதான் இப்போது ஹாட் நியூஸே!
இது சீனாவில் நடந்துள்ளது. தாவோ என்ற 28 வயது பெண் கர்ப்பமாக இருந்தார். பிறகு அவருக்கு குழந்தை பிறந்துவிட்டது. அதாவது இரட்டை பெண் குழந்தை!
இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இவர் இருந்தபோது ஆஸ்பத்திரிக்கு செக்-அப்புக்காக சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.

கர்ப்பப்பை
அப்போது கருப்பையில் இருந்த இரண்டு குந்தைகளும் சண்டை போட்டு கொண்டு விளையாடி உள்ளன. முழு கரு வளர்ந்திருந்த நிலையில் குழந்தையின் உருவம் கர்ப்பப்பையில் தெளிவாக தெரிகிறது.

சந்தோஷம்
குழந்தைகளின் இரு மண்டைகளும் முட்டிக் கொள்வதும், மோதிக் கொள்வதும், சில சமயம் கைகளால் தள்ளி கொள்வதும் என ஒரே சண்டையாக இருக்கிறது. இது சண்டையா, விளையாட்டா, அல்லது விளையாட்டுக்கு சண்டையா என தெரியவில்லை. இதை பார்த்ததும் குழந்தைகளின் பெற்றோருக்கு சந்தோஷம் தாங்கவில்லை.
சண்டை
உடனே ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இந்த வீடியோவை தருமாறு கேட்டு வாங்கி உள்ளனர். பிறகு இதனை சமூகவலைதள பக்கத்திலும் பதிவிட்டுவிட்டார்கள். கருவறைக்குள் சண்டையிடும் அந்த குழந்தைகளின் வீடியோதான் இப்போது டாப் வைரல்! வீடியோவை பார்ப்பவர்கள் எல்லோருமே சிரித்து மகிழ்கிறார்கள். இப்போதே 25 லட்சம் லைக்ஸ், 80 ஆயிரம் கமெண்ட்டுகள் இந்த வீடியோவுக்கு கிடைத்துள்ளது.

பாசப்பிணைப்பு
ஆனால் இது வெறும் சண்டை மட்டும் இல்லங்க, ஒருமுறை ஸ்கேன் பார்க்க போனது ஒரு குட்டியின் தலையை இன்னொரு குட்டி அரவணைத்து இருந்த காட்சியையும் அதன் தந்தை கண்டுள்ளார். இந்த குட்டிப் பருவத்திலேயே இவர்கள் இப்படி பாசப் பிணைப்புடன் இருப்பதால் வளர்ந்த பின்னரும் இவர்கள் இணை பிரியா சகோதரிகளாக வளர்வார்கள் என்றும் அந்த தந்தை நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

செர்ரி பழம்
இந்த தாய், குழந்தைகள் வயிற்றில் இருந்தபோது, செர்ரி, ஸ்டிராபெரி என்ற இரண்டு பழங்களைத்தான் அதிகம் விரும்பி சாப்பிட்டாராம். அதனால் இந்த இரு பெண் குழந்தைகளுக்கும் செர்ரி, ஸ்டிராபெரி என்றே பெயர் வைத்திருக்கிறாராம்! ஸ்வீட் கேர்ள்ஸ்தான்! ஆனா ரெண்டு பேரும் எதுக்கு சண்டை போட்டாங்கன்னுதான் நமக்கு தெரியல!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications