For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பூமிப் பொண்ணு" சுத்துறதை நேரடியா பார்க்கலாம்... நாசா உதவியோடு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: பூமி தினமும் தன்னைத் தானே சுற்றுவதை நேரடியாக பார்க்கும் வகையில் புதிய இணையதளம் ஒன்றை துவக்கியுள்ளது நாசா.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, பூமி மற்றும் மற்ற கிரகங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தங்களது கண்டுபிடிப்புகளை அது தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், பூமியின் தனிப்பட்ட புகைப்படங்களை மட்டும் வெளியிடுவதற்கென நாசா புதிய இணையதளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

வண்ணமயமான புகைப்படங்கள்...

வண்ணமயமான புகைப்படங்கள்...

இந்தப் புதிய இணையதளத்தில் சுமார் 12 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட பூமியின் வண்ணமயமான புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது. இந்தப் புகைப்படங்கள் நாசாவின் எர்த் பாலிகுரோமேடிக் இமேஜிங் கேமராவால் எடுக்கப் படுபவை ஆகும்.

எவ்வாறு சுற்றுகிறது...

எவ்வாறு சுற்றுகிறது...

இந்தப் புகைப்படங்கள் மூலம் பூமி எவ்வாறு சுற்றுகிறது. நாள்தோறும் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன என்பது போன்ற விபரங்கள் நமக்குக் கிடைக்கும்.

பழைய புகைப்படங்கள்...

பழைய புகைப்படங்கள்...

மேலும், இந்த இணையதளத்தில் உள்ள ஆவணப்பக்கத்தில் பழைய புகைப்படங்களை நேரம் மற்றும் இன்னபிற தகவல்களை அளித்து நாம் தேடிப் பார்க்கும் வசதியும் உள்ளது.

நாசாவின் கேமராவால்...

நாசாவின் கேமராவால்...

இந்த புகைப்படங்கள் பூமியிலிருந்து சுமார் பத்து லட்சம் மைல் தூரத்தில் உள்ள, நாசாவால் அனுப்பப்பட்ட டீப் ஸ்பேஸ் கிளைமேட் அப்சர்வேட்டரி கேமராவால் எடுக்கப்படுகிறது.

மாணவர்களுக்கு உதவும்...

மாணவர்களுக்கு உதவும்...

நாசாவின் இந்த புதிய இணையதளம் வானியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

English summary
NASA has launched a new website where you can see images of the full, sunlit side of the Earth as it rotates every day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X