"டேனிஷை நாங்கள் கொல்லவில்லை".. பத்திரிகையாளர்கள் எங்களை மட்டும்தான் அணுக வேண்டும்.. தாலிபான்!
காபுல்: டேனிஷ் சித்திக்கை நாங்கள் கொலை செய்யவில்லை, ஆப்கானிஸ்தானுக்கு எந்த செய்தியாளர் செய்தி சேகரிக்க வந்தாலும் அவர்கள் எங்களைத்தான் அணுக வேண்டும் என்று தாலிபான் படை தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக வெற்றிபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தாலிபான்கள் வேகமாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள 250க்கும் அதிகமான மாவட்டங்களை தாலிபான் இதுவரை கைப்பற்றி உள்ளது. மீதமுள்ள மாவட்டங்களை விரைவில் தாலிபான் கைப்பற்றும் நிலை உள்ளது.
ஆப்கான் படைகளுக்கும் தாலிபான்களுக்கும் இடையில் நடந்த மோதலில் கடந்த வாரம் இந்திய செய்தியாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். உலக நாடுகள் இடையே இந்த மரணம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பேட்டி
இந்த நிலையில் டேனிஷ் சித்திக் மரணம் குறித்தும், தாலிபான் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பது குறித்தும், தாலிபான் செய்தி தொடர்பாளர் பேட்டி அளித்துள்ளார். அதில், நாங்கள் ஆப்கானிஸ்தானின் 85 சதவிகித பகுதிகளை கைப்பற்றிவிட்டோம். மீதம் இருக்கும் 15 சதவிகிதத்தையும் நாங்கள் விரைவில் கைப்பற்றிவிடுவோம்.

பாகிஸ்தான்
பாகிஸ்தான் எங்களுக்கு உதவுவதாக வெளியாகும் செய்திகள் உண்மை இல்லை. நாங்கள் தனியாகவே ஆப்கான் எதிரி படைகளுக்கு எதிராக போராடி வருகிறோம். எங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை. எங்களுக்கு எதிரான தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

பெண்கள்
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக நாங்கள் கட்டுப்பாடுகளை விதிப்பதாக தவறாக பரப்பரப்படுகிறது. தாலிபான்கள் பெண்களுக்கு எதிராக எந்த கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. பெண்களுக்கு உரித்தான உரிமைகளை தாலிபான்கள் கண்டிப்பாக வழங்கும். இதில் நிறைய வதந்தி பரபரப்படுகிறது.

டேனிஷ்
டேனிஷ் சித்திக் மரணத்திற்கு தாலிபான்கள் இரங்கல் தெரிவித்தது. நாங்கள் அவரை கொலை செய்யவில்லை. அவர் எங்களின் எதிரி படைகளுடன் இணைந்து செய்து சேகரித்தார். ஆப்கானிஸ்தானுக்கு எந்த செய்தியாளர் செய்தி சேகரிக்க வந்தாலும் அவர்கள் எங்களுடன்தான் பேச வேண்டும். எங்களைத்தான் அணுக வேண்டும்.

இரங்கல்
எங்கள் நாட்டின் செய்தியாளர்களை எங்களைத்தான் அணுகுகிறீர்கள். ஆப்கானிஸ்தானின் கட்டுமானங்கள் எதையும் நாங்கள் இடிக்கவில்லை. எதிரிகளின் கேம்ப்கள், படைத்தளங்களை மட்டுமே நாங்கள் தாக்கி அழிக்கிறோம். எங்களுக்கு எதிரான தவறான வதந்திகள் தொடர்பு பரப்பப்படுவதை ஏற்க முடியாது என்று தாலிபான்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
-
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications