ஹாட்லைனில் கேள்வி கேட்ட இந்தியா.. அருணாசலப்பிரதேசம் சீனாவில் இருக்கும் ஒரு பகுதி.. சீனா பகீர் பதில்!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அருணாசலப்பிரதேசம் சீனாவின் கீழ் வரும் தெற்கு திபெத்தில் இருக்கும் ஒரு பகுதி என்று சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா சீனா இடையே லடாக்கில் மோதல் நிலவி வருகிறது. இன்னொரு பக்கம் தற்போது அருணாசலப்பிரதேசத்திலும் சீனாவின் ராணுவம் அத்துமீற தொடங்கி உள்ளது. அதன்படி அருணாசலப்பிரதேசத்தை சேர்ந்த 5 இந்தியர்கள் சீன ராணுவத்தால் கடத்தப்பட்டதாக கடந்த இரண்டு நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இணையத்தில் வெளியான செய்தியை தொடர்ந்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த செய்திகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

போலீஸ் புகார்

போலீஸ் புகார்

கடத்தப்பட்ட 5 பேரின் குடும்பத்தினர் புகார் அளித்ததாக செய்திகள் வெளியாகி வருகிறது. கடத்தப்பட்டதாக கூறப்படும் எல்லோரும் தகின் என்ற ஒரே குழுவை சேர்ந்தவர்கள். இவர்கள் அங்கே வேட்டையாடுவதை வழக்கமாக வைத்து இருப்பார்கள்.அருணாசலப்பிரதேசத்தில் உள்ள நாச்சோ காட்டுப்பகுதியில் வேட்டையாடும் போது 5 பேரும் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேள்வி கேட்கப்பட்டது

கேள்வி கேட்கப்பட்டது

இந்த நிலையில் 5 இந்தியர்கள் மாயம் குறித்து இந்தியா சார்பாக சீன அரசிடம் கேள்வி கேட்கப்பட்டது. இரண்டு நாடுகள் அதிகாரபூர்வமாக தொடர்பு கொள்ள பயன்படுத்தப்படும் ஹாட்லைன் தொடர்பு மூலம் இந்தியா, சீனாவிடம் கேள்வி எழுப்பியது. 5 இந்தியர்கள் நிலை குறித்தும், இவர்கள் கடத்தப்பட்டது உண்மையா என்றும் அருணாசலப்பிரதேசத்தில் சீனாவின் ராணுவ ஊடுருவல் குறித்தும் சீனாவிடம் இந்தியா கேள்வி எழுப்பி இருந்தது .

சீனா பதில்

சீனா பதில்

இதற்கு தற்போது சீனா பதில் அளித்துள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை சார்பாக இதற்கு கடுமையான பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்தியாவுடன் நாங்கள் ஹாட்லைனில் பேசினோம். 5 பேர் காணாமல் போனது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக எங்களிடம் எந்த விவரமும் இல்லை. இந்திய ராணுவத்தின் கேள்விக்கு எங்களிடம் பதில் இல்லை.

நேரடி மோதல்

நேரடி மோதல்

இந்தியா எப்போது அருணாசலப்பிரதேசத்தை அங்கீகரித்தது இல்லை. அருணாசலப்பிரதேசத்தை ஒரு பகுதியாக கூற முடியாது. அது சீனாவின் கீழ் வரும் தெற்கு திபெத் பகுதியில் இருக்கும் ஒரு இடமாகும், என்று சீனா கூறியுள்ளது. இதனால் லடாக்கை தொடர்ந்து அருணாசலப்பிரதேசத்தில் வெளிப்படையாக மோதலை தொடங்கி உள்ளது தெளிவாகிறது. அருணாசலப்பிரதேசத்தில் அவ்வப்போது அத்துமீறலை செய்து வந்த நிலையில் தற்போது சீனா நேரடியாக மோதலை தொடங்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+