For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கைதிகளை மிகக் கொடூரமாக சித்ரவதை செய்யும் குவாண்டனாமோ சிறைச் சாலைகளை மூடுகிறது யு.எஸ்.

By Mathi
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படுவோரை கைது செய்து உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய குவாண்டனாமோ சிறையை இழுத்து மூடுவதற்கான இறுதி கட்டப் பணிகளை அமெரிக்கா செய்து வருகிறது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை அல்கொய்தா இயக்கம் தகர்த்ததைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் அமெரிக்கா மும்முரமாக இறங்கியது. அப்படி சிக்கிய தீவிரவாத்களை கியூபா அருகே உள்ள குவாண்டனாமோ வளைகுடா சிறைச் சாலையில் அடைத்தது.

White House says it is drafting plan to close Guantanamo

அங்கு உலகிலேயே மிக மோசமான சிறைக் கொடூரங்களை அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் அரங்கேற்றினர். இத்தகைய கொடூரங்களை நிகழ்த்தியதில் அமெரிக்காவின் பெண் ராணுவ அதிகாரிகளும் முக்கிய பங்கு வகித்தனர். உலகை உலுக்கும் அளவுக்கு இந்த கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன.

இதனால் குவாண்டனாமோ சிறைச்சாலை கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்களும் வெடித்தன. 2009ஆம் ஆண்டு அமெரிக்கா அதிபராக பதவியேற்ற போது இந்த குவாண்டனாமோ சிறைச்சாலைய இழுத்து மூடுவேன் என்று ஒபாமா சூளுரைத்திருந்தார். இதனைத் தொடர்ந்து இந்த சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வந்தனர்.

தற்போது இதனை நிரந்தரமாக மூடுவதற்கான இறுதி கட்ட பணிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

English summary
The White House said on Wednesday it was in the final stage of drafting a plan for closing the Guantanamo prison for foreign terrorism suspects, racing against time to resolve one of President Barack Obama's most intractable problems.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X