யார் இந்த ஸ்லென்டர் மேன்?.. இவருக்கும் மோமோக்கும் என்ன சம்மந்தம்??
Recommended Video

நியூயார்க்: உலகத்துல இருக்கற மக்கள் எல்லாருமே மோமோ சேலஞ்ச பத்தி பேசிட்டுருக்கும்போது அமெரிக்கால இருக்கற மக்கள் மட்டும் ஸ்லென்டர்மேன் திரும்ப வந்துட்டதாகவும், 2018ஆம் ஆண்டின் ஸ்லென்டர்மேன் மோமோவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர். யார் அந்த ஸ்லென்டர் மேன்?
மோமோ சேலஞ்ச் எனப்படும் விளையாட்டு, உலகில் இருக்கும் எல்லா நாட்டு மக்களையும் பயம் காட்டிக்கொண்டு இருக்கிறது. அந்த மோமோ சேலஞ்ச் நாம் அன்றாடம் யூஸ் பண்ற வாட்சப் மூலம் பலபேர் உயிரை கொன்று இருக்கிறது.
இந்த மோமோ சேலஞ்ச் பற்றி அன்றாடம் தினமும் ஒரு முறையாவது கேட்கிற, படிக்கிற நிலைமை வந்துடுச்சின்னுதான் சொல்லணும். இது போதாதுன்னு இப்போ யாரோ ஸ்லென்டர்மேன் ஒரு புது ஆளைப்பற்றி சொல்லிட்டு இருக்காங்க, இதுவும் விளையாட்டா இல்ல நிஜ மனிதனா?

ஸ்லென்டர் மேன் என்பவர் யார் ?
2010ஆம் ஆண்டு அமெரிக்கால வெளிப்படையா ஒரு தனியார் வெப்சைட்ல போட்டி ஒன்னு வச்சி இருந்தாங்க. அது என்னனா யாராவது இருப்பதிலேயே ரொம்ப கொடூரமான பார்க்க ரொம்ப பயங்கரமா இருக்கும் ஒரு வில்லன் கேரக்டரை மக்கள் உருவாக்கணும். அந்த போட்டி மூலமா ஒருத்தர் உருவாக்கின கேரக்டர் தான் இந்த ஸ்லென்டர் மேன்.

ஸ்லென்டர் மேன் பார்க்க எப்படி இருப்பாரு
ஸ்லென்டர் மேன் எனப்படும் கேரக்டர் பார்க்க ரொம்ப கொடூரமாக இருக்கும். ரொம்ப உயரமான கோட் போட்ட மனிதன்தான் இந்த ஸ்லென்டர் மேன். ஆனா அவர் முகத்துல எந்த உறுப்பும் இருக்காது. கூடவே அவர் முதுகு பின்புறத்துல இருந்து ஆக்டோபஸ்க்கு இருக்கற மாதிரி கைகள் நிறையவே இருக்கும். எனவே அதை பார்த்தாலே எல்லாருக்கும் பயமாக இருக்கும்

சூப்பர் வில்லன் ஸ்லென்டர் மேன்
ஒரு சூப்பர் வில்லனுக்காக கிரியேட் பண்ண ஸ்லென்டர் மேன். போக, போக அமெரிக்காவில் மக்கள் அனைவரும் பரவலாக பேச கூடிய ஒரு விஷயமாக மாறியது. அந்த கேரக்டரை பத்தி மக்கள் தானா பல கதைகளும் உருவாக்கினாங்க. அது மட்டும் இல்ல நிறைய இளைஞர்கள் இதை பத்தி ரொம்ப ஆர்வமா இணையதளங்களை தேட ஆரம்பிச்சாங்க.

பல பேர்களை மிரட்டிய ஸ்லென்டர்மேன்
ஸ்லென்டர் மேன் என கருதப்படும் அந்த நபர் காட்டில்தான் இருப்பதாகவும் இரவு நேரங்களில் வெளியே செல்பவர்களை பின்தொடர்ந்து பிடித்துக்கொள்வார் எனவும் நிறைய கதைகள் உருவாக்கப்பட்டன. அது மட்டும் இல்லாமல் அவர் பிடிக்கும் நபரை அவர் கொஞ்ச நாளில் பைத்தியமாக்கி விடுவார் எனவும் கதைகள் பேசப்பட்டன. அங்கு இருக்கற மக்கள் இந்த கதைகளை நம்பவும் ஆரம்பித்தனர், முக்கியமாக இளைஞர்கள்.

ஸ்லென்டர்மேனால் நடந்த துயரம்
இந்த ஸ்லென்டர்மேன் கதைகளை கேட்டு நம்ப தொடங்கின குழந்தைகள், இளைஞர்கள் பல பேர் கொலைகாரர்களாக மாறி இருக்கிறார்கள். 12 வயது சிறுமிகள் 2 பேர் ஸ்லென்டர்மேன் போல ஆகவேண்டும் அதற்கு அவருக்கு உயிர் பலி கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவுங்க கூட படிச்ச தோழியை 18 தடவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அமெரிக்காவையே உலுக்கியது.

ஸ்லென்டர்மேன்க்கும் மோமோக்கும் என்ன சம்மந்தம்
அமெரிக்காவில் இருக்கும் மக்கள் ஸ்லென்டர்மேன் போலவே மோமோவும் பார்க்க கொடூரமாக இருப்பதால் இதை விட ஆயிரம் மடங்கு கொடுரமான ஸ்லென்டர்மேனை அடிப்படையாக கொண்டுதான் மோமோ உருவாக்கப்பட்டிருப்பதாக கருதுகின்றனர் எனவே ஸ்லென்டர்மேன் மோமோவின் அம்மா என கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications