Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாப்பா எப்படி இருக்கா? தந்தை கேட்டதுமே கண்கலங்கிய டாக்டர்கள்.. ஆஸ்பத்திரியில் நடந்த அந்த அதிசயம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கேரள மாநிலம் திருச்சூர் அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தேவநந்தாவுக்கும், அவரது அப்பா பிரதீஷுக்கும் இடையிலான பாசப் போராட்டம் இப்போது ஒட்டுமொத்த நாட்டையே நெகிழ செய்திருக்கிறது.. பொதுவாக இதுபோன்ற பெரிய கல்லீரல் மாற்று ஆபரேஷன்கள் வெளிநாடுகளிலோ அல்லது பெரிய பெரிய நகரங்களிலுள்ள கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகளில்தான் நடக்கும்.. ஆனால், ஒரு 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி, சட்டப் போராட்டங்களை நடத்தி தன்னுடைய அப்பாவுக்கு உயிர் கொடுத்திருப்பது ஒரு பெரிய சாதனையாகவும், உன்னதமான தியாகமாகவும் பார்க்கப்படுகிறது.. என்ன நடந்தது?

தேவநந்தாவின் அப்பா பெயர் பிரதீஷ்.. இவர் திருச்சூரில் ஒரு சிறிய கஃபே நடத்தி வந்தார்.. கடந்த சில வருடங்களாகவே அவருக்கு கடுமையான கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, நிலைமை மோசமானது..

Andhra Pradesh Kidney Transplant Kerala Liver Donation Father Daughter

கேரளா தந்தை - மகள்

"கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் உங்கள் அப்பாவை காப்பாற்ற ஒரே வழி" என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.. பொருத்தமான தானம் கொடுப்பவர் கிடைக்காமல் அந்த ஏழை குடும்பம் தவித்தபோது, லட்சக்கணக்கில் செலவாகும் ஆபரேஷன் ஒருபுறம், தானம் கிடைப்பது மறுபுறம் என இரட்டை சவால்கள் அந்த குடும்பத்தின் முன்னால் நின்றன..

தன் அப்பாவின் நிலைமையைப் பார்த்த தேவநந்தா, கொஞ்சமும் யோசிக்காமல் தன் கல்லீரலை தானமாக கொடுக்க முன்வந்தார்.. ஆனால், இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் உறுப்பு தானம் செய்ய சட்டம் அனுமதிக்காது..

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை

இருந்தாலும், என் உயிரை கொடுத்தாவது என் அப்பாவை காப்பாற்றுவேன் என்று வைராக்கியத்தோடு, தேவநந்தா கேரள ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார்.. அவரது பாசத்தை பார்த்து வியந்த நீதிமன்றம், ஒரு விதிவிலக்காக அவருக்கு அனுமதி கொடுத்தது..

இதற்காக தேவநந்தா தன்னை தயார்படுத்திக் கொண்டார்.. தன் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக, உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றி, உள்ளூர் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சிகளையும் செய்தார்.. கடந்த பிப்ரவரி மாதம் கொச்சியில் உள்ள ராஜகிரி ஆஸ்பத்திரியில் இந்தச் சவாலான ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது.. பெரிய ஆபத்துகளை பற்றிக் கவலைப்படாமல், ஒரு தந்தைக்காக மகள் செய்த இந்தத் தியாகம் அங்கிருந்த டாக்டர்களையே கண்கலங்க வைத்தது..

அறுவை சிகிச்சை முடிந்து தேவநந்தா நலமடைந்த பிறகு, அவரது தியாகத்தைப் பாராட்டி அந்த ஆஸ்பத்திரி நிர்வாகம் ஆபரேஷன் செலவு முழுவதையும் தள்ளுபடி செய்துவிட்டது.

கர்நாடக மாநிலம்

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அஜ்ஜப்பா என்பவருக்குத் திடீரென கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, உயிருக்குப் போராடும் நிலை உருவானது.. அவரை பிழைக்க வைக்க கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் வழி என்று டாக்டர்கள் கைவிரித்த நிலையில், அவருடைய மகள் பூர்விகா கொஞ்சமும் யோசிக்காமல் தனது கல்லீரலின் ஒரு பகுதியை அப்பாவுக்கு தானமாக வழங்க முன்வந்தார்..

கல்லீரல் தானம் என்பது ஒரு பெரிய அறுவை சிகிச்சை என்றாலும், தந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு அந்த இளம்பெண் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்தார்..

பூர்விகாவின் கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து அஜ்ஜப்பாவிற்குப் பொருத்தும் இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சை, பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது..

ஆபரேஷன் முடிந்து பூர்விகா கண்விழித்தபோது, முதலில் கேட்டது "என் அப்பா நல்லா இருக்கிறாரா?" என்பதுதான்.. மகளின் கல்லீரலைப் பெற்றுக்கொண்ட தந்தை அஜ்ஜப்பா தற்போது நலமடைந்து வருகிறார்..

கிட்னி ஆபரேஷன்

இதேபோன்ற சம்பவம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும் மே 2024ல் நடந்தது நினைவிருக்கலாம்.. ஜக்கையாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வீரராகவையா.. இவரது மகள் நாவ்யாஸ்ரீ, கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.. வாராவாரம் டயாலிசிஸ் செய்துகொள்வதும், அதனால் ஏற்படும் உடல் உபாதைகளை அவரால் தாங்கவே முடியவில்லை.

ஒரு கட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு என்று மருத்துவர்கள் சொன்னபோது, அந்த எளிய விவசாய குடும்பம் நிலைகுலைந்து போனது..

தந்தை - மகள் பாச போராட்டம்

தன்னுடைய மகள் மரண படுக்கையில் துடிப்பை பார்க்க சகிக்காத வீரராகவையா, தனது கிட்னியை தானமாகத் தர முன்வந்தார்.. முதன்முறையாக குண்டூர் அரசு பொது மருத்துவமனையிலேயே இந்தச் சவாலான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவர்கள் குழு முடிவு செய்தது.. அதிநவீன வசதிகள் குறைந்த சூழலிலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்பும் தந்தையின் நம்பிக்கையும் அந்த ஆபரேஷனை வெற்றிகரமாக முடிக்க உதவின..

ஆபரேஷன் முடிந்து கண்விழித்ததுமே வீரராகவையா, முதலில் கேட்டது "என் மகள் எப்படி இருக்கிறாள்?" என்பதுதான்.. அப்பாவிடமிருந்து பெற்ற கிட்னி, நாவ்யாஸ்ரீயின் உடலில் சீராக செயல்படத் தொடங்கிய அந்தத் தருணம், அங்கிருந்த டாக்டர்களையே கண்கலங்க வைத்துவிட்டதாம்..

ஒரு தந்தையின் அன்பு, ஆந்திராவின் கிராமப்புற மருத்துவ வரலாற்றில் ஒரு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கிறது.. அதேபோல கேரள மகள், தன் தந்தையின் உயிருக்காக சட்டத்தையும், வலியையும் வென்ற சம்பவம், "பெற்ற மனம் பித்து" என்பதைத் தாண்டி "பிள்ளை மனம் தங்கம்" என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது..!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+