வாவ்.. இனி எல்லாம் பயோ சிப்தான்.. உடலில் சிப்போடு அலையும் ஸ்வீடன் மக்கள்!
ஸ்வீடன் நாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் மொத்தம் 3500 பேர், தங்கள் கைகளில் பயோ சிப் பொருத்தி இருக்கிறார்கள்.
ஸ்டாஹொம்: ஸ்வீடன் நாட்டில் கடந்த சில நாட்களில் மட்டும் மொத்தம் 3500 பேர், தங்கள் கைகளில் பயோ சிப் பொருத்தி இருக்கிறார்கள்.
பயோ சிப் எனப்படும் சிம் கார்ட் போன்ற சிப்பை மனித உடலில் எங்கு வேண்டுமானாலும் பொருத்திக் கொள்ளலாம். ஒரு முறை பொருத்திவிட்டால் சார்ஜ் ஏற்றவேண்டிய அவசியமே கிடையாது. இதை பல விதமான பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த நிலையில் உலகிலேயே அதிக பேர் ஸ்வீடன் நாட்டில்தான் பயோ சிப்புடன் வலம் வருகிறார்கள். அந்த நாட்டில் பயோ சிப் பொருத்துவது கட்டாயப்படுத்தப்படவில்லை என்றாலும், பல மக்கள் தானாக முன் வந்து பயோ சிப் பொருத்திக் கொள்கிறார்கள்.

முன்னேற்றம்
ஸ்வீடன் நாட்டில் உள்ள மக்கள் அந்நாட்டில் உள்ள அரசை அதிதீவிரமாக நம்ப கூடிய குணம் கொண்டவர்கள். அதேபோல் எந்த விதமான தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் முதலில் ஏற்றுக்கொள்ள கூடியவர்கள். அந்த வகையில் தற்போது பயோ சிப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏற்கனவே அந்நாட்டில் முழுக்க முழுக்க இண்டெர்நெட் மூலம் வணிகம் செய்ய அரசு பரிந்துரை செய்துள்ளது. இந்தியா போல, டிஜிட்டல் ஸ்வீடன் என்று வேண்டுமானால் பெயர் வைக்கலாம்.

நிறுவனம்
அதன் முதற்கட்டமாக, அந்நாடு, அந்நாட்டில் மட்டும் செல்ல கூடிய 'இ- க்ரோனா'' என்ற இ-கரன்சியை அறிமுகப்படுத்தியது. அதன்பின் ஸ்வீடனில் செயல்படும் அமெரிக்க நிறுவனம் ஒன்று,தங்கள் பணியாளர்கள் எல்லோரும், கைகளில் பயோ சிப் பொருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. அதன்படி எல்லோரும் பயோ சிப் பொருத்தினார்கள்.

நிறைய பேர்
இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களில் மட்டும் ஸ்வீடன் நாட்டில் 3500 பேர் சிப் பொருத்தியுள்ளனர். தங்கள் கைகளில்,கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் பயோ சிப்பை பொருத்தியுள்ளனர். இதற்காக மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை எப்போது தேவையோ அப்போது நீக்கிக் கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயன்
இதன் மூலம் மக்கள் யாரும் அடையாள அட்டைகளை பயன்படுத்த வேண்டியதில்லை.இந்த பயோ சிப்பில் நம்முடைய தகவல் எல்லாம் இருக்கும். அதேபோல் டிக்கெட் எடுப்பது, பாஸ்போர்ட், என எல்லா விதமான விஷயமும், இந்த பயோ சிப்பில் இருக்கும். இதை எல்லா இடங்களிலும் ஸ்வீடன் நாட்டில் பயன்படுத்த முடியும்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications