அணு உலை வெடித்த.. வாழவே தகுதியற்ற "செர்னோபில்" மண்.. போராடி பிடித்த ரஷ்யா! அதிர்ச்சி தரும் பிளான்!
மாஸ்கோ: அணு உலை வெடித்த வாழவேதகுதியற்ற செர்னோபில் பகுதியை போராடி உக்ரைனிடம் இருந்து ரஷ்யா கைப்பற்றி இருக்கிறது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் செயலை பற்றி தெரிந்துகொள்ளும் முன் செர்னோபில் அணு உலை வெடிப்பு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 1986 ஏப்ரல் 26ம் தேதி செர்னோபில் அணு உலை வெடித்தது. உக்ரைன் ரஷ்யா இடையே இருக்கும் பிரிப்யாட் பகுதியில் இந்த செர்னோபில் அணு உலை வெடித்தது.
அப்போது சோவியத் யூனியன் கீழே இரண்டு நாடுகளும் ஒன்றாக இருந்தது. அங்கு இருக்கும் ரியாக்டர் 4ல் அணு உலை வெடிப்பு ஏற்பட்டது.

செர்னோபில்
RBMK ரியாக்டரான இதில் பாதுகாப்பு சோதனைக்காக மின்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அப்போது வெப்பநிலை அதிகரிப்பதை தடுப்பதற்காக கூலண்ட் பயன்படுத்தும் போது, அதில் சில தவறுகள் ஏற்பட்டு திடீரென வெப்பநிலை உச்சம் தொட்டது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அணு உலை திடீரென வெடித்துச் சிதறியது. ரியாக்டர் கோர் மொத்தமாக வெடித்த நிலையில் செர்னோபில் முழுக்க அணு கதிர்வீச்சு பரவியது.

அணு உலை
5 லட்சம் பேர் இங்கு கஷ்டப்பட்டு செர்னோபில் உலையை மூடி அங்கு கதிர்வீச்சை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. இதை தொடக்கத்தில் சில நாட்கள் சோவியத் யூனியன் மூடி மறைத்தது. ஆனால் பின்னர் மக்களுக்கு விஷயம் தெரிந்து அது மிகப்பெரிய பேரழிவிற்கு வழி வகுத்தது. சோவியத் யூனியன் பின்னர் உடைந்ததற்கும் கூட செர்னோபில் முக்கியமான ஒரு காரணமாக பார்க்கப்பட்டது. இந்த விபத்தில் நேரடியாக பலியானது என்னவோ சில நூறு பேர்கள் மட்டுமே.

சோவியத்
ஆனால் மறைமுகமாக இங்கு ஏற்பட்ட கதிர்வீச்சு காரணமாக அங்கு பணியாற்றிய நபர்கள், அவர்களின் குழந்தைகள், உறவினர்கள், அந்த ஊர் பகுதியை சேர்ந்தவர்கள் என்று பலருக்கு கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டது. இதில் 90 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். ஆனால் இதெல்லாம் மறைமுக மரணங்கள். செர்னோபில் விபத்து உலக வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான அணு உலை வெடிப்பு ஆகும்.

ரஷ்யா போர்
இந்த நிலையில் சோவியத் யூனியன் உடைந்த பின் செர்னோபில் பகுதி உக்ரைன் வசம் சென்றது. இந்த பகுதியை நேற்று இரவு வரை உக்ரைன்தான் கட்டுப்படுத்தி வந்தது. நேற்று இரவு செர்னோபில்லை ரஷ்யா ராணுவத்தின் உதவியோடு கைபற்றியது. இங்கு இப்போதும் கூடஅணு கசிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பகுதி இப்போதும் மக்கள் வாழத் தகுதியற்ற இடம் ஆகும். இங்கு யாரும் வசிக்கவில்லை. இப்படி வாழவே தகுதியற்ற செர்னோபில் பகுதியை போராடி உக்ரைனிடம் இருந்து ரஷ்யா கைப்பற்றி இருக்கிறது

உக்ரைன்
ரஷ்யாவின் இந்த செயலுக்கு பின் முக்கியமான காரணம் இருப்பதாக உலக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். செர்னோபில் என்பது பூகோள ரீதியாக மிக முக்கியமான இடத்தில் உள்ளது. உக்ரைனுக்கு மேலே இருக்கும் பெலாரஸ் நாட்டிற்கு செர்னோபில்லில் இருந்து மிக எளிதாக சென்றுவிட முடியும். அதேபோல் இந்த நாட்டில் இருந்து உக்ரைன் தலைநகர் கிவ் பகுதிக்கு செர்னோபில் வழியாக மிக எளிதாக செல்ல முடியும். சரியாக செல்ல வேண்டும் என்றால் பெலாரஸ்- கிவ் இடையிலான ஷார்ட் ரூட் என்பது செர்னோபில்தான்.
Recommended Video

என்ன காரணம்
பெலாரஸ் ரஷ்யாவிற்கு ஆதரவான நாடு. செர்னோபில்லை பிடிப்பதன் மூலம் பெலாரஸ் வழியாக படைகளை அனுப்பி எளிதாக உக்ரைன் தலைநகர் உள்ளே புகுந்துவிட முடியும். இதற்காகவே ரஷ்யா இந்த பகுதியை முதலில் கைப்பற்றி உள்ளது.வாழ தகுதியற்ற இடம் என்றாலும் இதை ரஷ்யா கைப்பற்ற இதுவே காரணம் ஆகும். ரஷ்யா இருப்பதிலும் மிக வேகமாக ஆக்கிரமிப்பு ரூட்டை பயன்படுத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டி உள்ளது. ரஷ்யாவின் இந்த செயல் உக்ரைன் போரில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications