For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"நடுங்கிய புதின்.." நீல நிறத்தில் மாறிய கைகள்.. ரஷ்ய அதிபருக்கு என்ன ஆச்சு! கவனிக்கும் உலக நாடுகள்

Google Oneindia Tamil News

மாஸ்கோ: உக்ரைன் போர் ஒரு பக்கம் இன்னும் கூட முடியாமல் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் புதின் குறித்து வெளியாகி உள்ள தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

ரஷ்ய அதிபர் புதின் கடந்த பிப். மாதம் உக்ரைன் மீது முழு வீச்சில் போரைத் தொடங்கினார். பல மாதங்கள் கடந்தும் தொடரும் இந்த போரால் இரு நாடுகளுக்கு மட்டுமின்றி உலகெங்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது.

தற்போது உக்ரைனை வெல்வது கடினம் என புதின் புரிந்து கொண்டாலும், படையை இப்போது திரும்பப் பெறுவது அசிங்கம் என அவர் நினைக்கிறார். இதன் காரணமாகவே பல மாதங்களைக் கடந்தும் இந்த போர் தொடர்ந்து வருகிறது.

 பெரிய அவமானம்! ஜி20 மாநாட்டை சீண்டாத புதின்..இடையில் உள்ளே வரும் உக்ரைன்! செம கடுப்பில் உலக நாடுகள் பெரிய அவமானம்! ஜி20 மாநாட்டை சீண்டாத புதின்..இடையில் உள்ளே வரும் உக்ரைன்! செம கடுப்பில் உலக நாடுகள்

 புதின்

புதின்

ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள போதிலும், புதின் தனது முடிவில் இருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க, புதின் உடல்நிலை குறித்து சில காலமாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளது. இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புதின், கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இதில் தங்களின் பொது எதிரி அமெரிக்காவுக்கு எதிராக அணியை உருவாக்குவது குறித்து ஆலோசித்தனர்.

 நீல கைகள்

நீல கைகள்

இது தொடர்பான ஃபோட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில், இந்தச் சந்திப்பின் புகைப்படங்களும் வீடியோக்களும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. அதில் ரஷ்ய அதிபர் புதினின் கைகள் மர்மமான முறையில் நீல (purple) நிறத்தில் இருந்து உள்ளது. இது புதினின் உடல்நிலை குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பி உள்ளது. கடந்த சில மாதங்களாகவே புதினுக்கு மோசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அவர் மோசமான கேன்சரால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 நடுங்கிய புதின்

நடுங்கிய புதின்

மேலும், இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது புதின் தனது சேரை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு இருந்தார் என்று பிரிட்டன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், அவர் தனது கால்களை அசவுகரியமாக நகர்த்துவதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிந்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. அந்த மீட்டிங் முழுவதுமே புதின் நடுக்கத்துடனேயே அசவுகரியமாகக் காணமுடிந்ததாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

 கறுப்பு மார்க்

கறுப்பு மார்க்

முன்னதாக இந்த மாதம் தொடக்கத்தில் பொது நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புதினின படங்களில் அவரது கைகளில் வித்தியாசமாக இருந்தது. அவரது கைகளில் ஊசி குற்றப்பட்டதற்கான தழும்புகள் கருப்பு நிறத்தில் இருந்தது. இதுவும் கூட இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. பலரும் அது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையின் போது, நேரடியாக நரம்பிற்கு மருந்துகளை (IV) அளிக்கும் முறையால் ஏற்பட்ட டிராக் மார்க் என்று கூறினர்.

 தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

இது தொடர்பாக ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ரிச்சர்ட் டானட் கூறுகையில், "உடலின் மற்ற பாகங்களில் ஊசி போட முடியாத நிலையில், அவரது கைகளில் கறுப்பு நிற மார்க்குகள் கண்டறியப்பட்டு உள்ளது. இது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதையே காட்டுகிறது" என்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரஷ்ய அதிபர் புதின் குறித்த அமெரிக்க உளவுத்துறையின் ரிப்போர்ட் ஊடகங்களில் கசிந்தது. அதில் புதினுக்கு கேன்சர் மோசமான நிலையில் இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது.

 கொலை முயற்சி

கொலை முயற்சி

மேலும், இந்த ஆண்டு மார்ச் மாதம் புதினை குறி வைத்து கொலை முயற்சி நடந்ததாகவும் அதில் இருந்து அவர் தப்பியதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது. 70 வயதான புதின், இப்போது மிகப் பெரிய சிக்கலில் உள்ளார். உக்ரைன் போர் காரணமாக உலக நாடுகள் அவருக்கு எதிராகத் திரும்பி உள்ளது. வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் அறிவித்து உள்ளதால், ரஷ்ய பொருளாதாரம் திணறி வருகிறது.

போர்

போர்

உக்ரைன் போர் ஆரம்பித்து 8 மாதங்கள் ஆகிவிட்டது. இதில் ரஷ்யாவைச் சேர்ந்த பல ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ரஷ்யா முதலில் கைப்பற்றிய முக்கிய நகரங்களைக் கூட உக்ரைன் மீண்டும் கைப்பற்றி வருகிறது. தற்போதைய சூழலில் ரஷ்யாவுக்கு இந்த போர் பின்னடைவாகவே உள்ளது. இருப்பினும், இந்தச் சூழலில் போரை முழுமையாக முடித்துக் கொண்டால் அது அரசியல் ரீதியாகப் பின்னடைவைத் தரும் என்று யோசிக்கும் புதின் போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

English summary
Russian President Vladimir Putin hands turned into blue during meeting with Cuban leader: Vladimir Putin healt is in very bad condition says experts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X