For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லாமே பிசினஸுக்காகவாமே கோப்பால்... 7 முஸ்லீம் நாடுகளுக்கு மட்டும் டிரம்ப் தடை விதித்த ரகசியம்!

தனது குடும்பத்தினரின் பிசினஸ் நலனைக் கருத்தில் கொண்டு பல முஸ்லீம் நாடுகளுக்கு தடை விதிக்கவில்லை டிரம்ப் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செம வில்லங்கமாக இருக்கிறார். 7 முஸ்லீ்ம் நாடுகளை மட்டும் தடை பட்டியலில் சேர்த்த அவர், பல முஸ்லீம் நாடுகளை சேர்க்காமல் விட்டுள்ளார். தனது ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில் நடக்கும் முஸ்லீம் நாடுகளை அவர் லிஸ்ட் பக்கமே கொண்டு வரவில்லை.

பட்டியலில் இடம் பெறாத பல நாடுகளிலும் டிரம்ப்பின் குடும்பத்தினர் பல தொழில்களைச் செய்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதால்தான் இந்த பட்டியலில் அவை சேர்க்கப்படவில்லையாம்.

ஈரான், ஈராக், சிரியா, சோமாலியா, சூடான், லிபியா, ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவுக்கு வர விசா கிடையாது, இந்த நாடுகளிலிருந்து அகதிகளும் வரக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள டிரம்ப்பின் செயலுக்கு அமெரிக்காவிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பாவப்பட்ட நாடுகள்

பாவப்பட்ட நாடுகள்

இந்த நாடுகளில் டிரம்ப் எந்தத் தொழில் நிறுவனத்தையும் நடத்தவில்லை. இதனால்தான் கண்ணை மூடிக் கொண்டு இந்த நாடுகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளார். அதேசமயம், பல முக்கியமான முஸ்லீம் நாடுகளை டிரம்ப் அரசு கண்டு கொள்ளாமல் விட்டுள்ளது.

எல்லாமே பிசினஸுக்காக கோப்பால்!

எல்லாமே பிசினஸுக்காக கோப்பால்!

ஆனால் பிற முஸ்லீம் நாடுகளை டிரம்ப் கண்டு கொள்ளாமல் விட்டதற்குக் காரணம் அங்கெல்லாம் அவரது ரியல் எஸ்டேட் பிசினஸ் நடக்கிறது என்பதால்தான் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார் வாஷிங்டனில் செயல்பட்டு வரும் குடிமக்களுக்கான பொறுப்புரிமை என்ற தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த ஜோர்டான் லிபோவிட்ஸ்.

அரசியல் சட்டத்தை மீறும் செயல்

அரசியல் சட்டத்தை மீறும் செயல்

இதைக் குறிப்பிட்டு நார்ம் ஈசன் என்பவர் (இவர் முன்னாள் அதிபர் ஒபாமாவின் நெறிமுறைகளுக்கான ஆலோசகராக இருந்தவர்) டிரம்ப்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், எச்சரிக்கை: அதிபரே உங்களது முஸ்லீம்களுக்கான தடையில் சில நாடுகளை விட்டுள்ளீர்கள். அங்கெல்லாம் உங்களது தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன என்பதால் விதி விலக்கு அளித்துள்ளீரக்ள். இது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும். கோர்ட்டில் சந்திப்போம் என்று கூறியிருந்தார்.

அப்படியெல்லாம் இல்லை

அப்படியெல்லாம் இல்லை

ஆனால் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி கிரிஷாம் இதை மறுத்துள்ளார். அதிக ஆபத்து உடைய பகுதிகள் என்பதால்தான் இவை தடை செய்யப்பட்டுள்ளன. இதைச் செய்ய அதிபருக்கு அதிகாரம் உள்ளது. வேறு காரணம் இல்லை என்று கூறியுள்ளார் ஸ்டெபானி.

என்னென்ன தொழில்

என்னென்ன தொழில்

டிரம்ப் ரியல் எஸ்டேட், லைசென்ஸிங் பிசினஸ், மெர்கன்டைசிங் என பல தொழில்களை நடத்தி வந்தார். அதிபரானதும் அவற்றையெல்லாம் தனது மகன்களிடம் ஒப்படைத்து விட்டார். ஆனால் பிசினஸை ஒப்படைத்து விட்டாலும் கூட தனது குடும்பத் தொழிலுக்கு பாதுகாப்பாகத்தான் அவர் நடந்து வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

துருக்கி இல்லாதது ஏன்

துருக்கி இல்லாதது ஏன்

உண்மையில் துருக்கியில் பல தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்தன. ஆனால் அந்த நாட்டை டிரம்ப் தடை செய்யவில்லை. காரணம் அங்கு அவருக்கு தொழில்கள் உள்ளன என்பதால். துருக்கியில் அமெரிக்கர்கள் குறி வைத்துத் தாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம்

அதேபோல ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் அவர் தொடவில்லை. துபாயில் அவருக்கு பெரிய கோல்ப் ரிசார்ட் உள்ளது. அதேபோல ஸ்பா, வீட்டு வசதித் திட்டத்தையும் அவரது நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோல தனது தொழிலுக்குச் சாதகமான முஸ்லீம் நாடுகளை மட்டும் டிரம்ப் விட்டு விட்டதாக குற்றச்சாட்டுகள் கூறுகின்றன.

English summary
US president Donald Trump excluded many Muslim countries from Immigradion ban, keeping mind his businesses, say US watchdogs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X